19/12/2024
15/12/2024
TNPSC REVISED GROUP II, IIA, and IV --- Updated Syllabus?
செய்தி வெளியீடு
13/12/2024
தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும்,
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்ட ம்
✅✅✅✅✅
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி IV பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டம்
ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு
🔰🔰🔰🔰🔰
https://tnpsc.gov.in/tamil/syllabus.html
✴️✴️✴️✴️✴️
https://tnpsc.gov.in/English/syllabus.html
❇️❇️❇️❇️❇️
என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
All The Best
🙏
07/12/2024
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தனித்தேர்வர்கள் DECEMBER 17 வரை விண்ணப்பிக்கலாம்.
##################
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தனித்தேர்வர்கள் DECEMBER 17 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்; தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடை பெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து, தனித்தேர்வர்கள் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுகால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
.................................................................................
MORE INFO. CLICK HERE FOR H.SC👉https://apply1.tndge.org/dge-notification/HRSEC
MORE INFO. CLICK HERE FOR SSLC👉https://apply1.tndge.org/dge-notification/SSLC
🙏
23/11/2024
CBSE-10 & 12 Public Exam Timetable Released.
புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு (2024-25) கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்வுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக, விரிவான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 18-ம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளை சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சில தொழில்நுட்ப பாடத் தேர்வுகள் மட்டும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடத்தப்படும்.
12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி முடித்து, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக ஏதுவாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.cbse.gov.in இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Time Table👉Click Here
All the Best
🙏
List Of TN Govt Holidays.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாள்களை அறிவிக்கும். அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08-06-1957 நாளிட்ட பொது-1 20-25-26ஆம் எண் அறிவிக்கையின் படி 1881ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) 25ஆம் பிரிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.
- ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை
- ஜனவரி 14 பொங்கல் பண்டிகை - செவ்வாய்க் கிழமை
- ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் - புதன் கிழமை
- ஜனவரி 16 உழவர் திருநாள் - வியாழக் கிழமை
- ஜனவரி 26 குடியரசு தினம் - ஞாயிற்றுக் கிழமை
- பிப்ரவரி 11 தைப்பூசம் - செவ்வாய்க் கிழமை
- மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு - ஞாயிற்றுக் கிழமை
- மார்ச் 31 ரம்ஜான் - திங்கள் கிழமை
- ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு நிறுவனங்கள் - செவ்வாய்க் கிழமை
- ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி - வியாழக்கிழமை
- ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம் - திங்கள் கிழமை
- ஏப்ரல் 18 புனித வெள்ளி - வெள்ளிக் கிழமை
- மே 1 மே தினம் - வியாழக்கிழமை
- ஜூன் 7 பக்ரீத் - சனிக்கிழமை
- ஜூலை 6 மொகரம் - ஞாயிற்றுக் கிழமை
- ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் - வெள்ளிக் கிழமை
- ஆகஸ்ட் 16 கிருஷ்ண ஜெயந்தி - சனிக்கிழமை
- ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி - புதன் கிழமை
- செப்டம்பர் 5 மிலாதுன் நபி - வெள்ளிக் கிழமை
- அக்டோபர் 1 ஆயுத பூஜை - புதன் கிழமை
- அக்டோபர் 2 விஜயதசமி / காந்தி ஜெயந்தி - வியாழக்கிழமை
- அக்டோபர் 20 தீபாவளி - திங்கள் கிழமை
- டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் - வியாழக் கிழமை.
டாப்பில் ஜனவரி:
2025 ஆம் ஆண்டில் மாதங்களில், அதிக விடுமுறை நாட்கள் உள்ள மாதமாக ஜனவரி உள்ளது. ஜனவரியில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி - ஞாயிறு விடுமுறை தினங்கள் வேறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில் சனி ஞாயிறை தவிர ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு தினங்கள்:
பொங்கல் பண்டிகையானது செவ்வாய்க் கிழமையான ஜனவரி 14 அன்றும் , திருவள்ளூர் தினம், புதன்கிழமையான ஜனவரி 15, அன்றும், அதை தொடர்ந்து ஜனவரி 16 உழவர் தினம் வியாழக்கிழமை அன்றும் வரவுள்ளது. ஒருவேளை , அரசு மனது வைத்தால், வெள்ளிக்கிழமையும் கூடுதலாக விடுமுறை அளித்து சனி - ஞாயிறு விடுமுறை சேர்த்து அளிக்குமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ரம்ஜான் பண்டிகையானது, மார்ச் 31 வரவுள்ளதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புனித வெள்ளி ஏப்ரல் 18 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
22/11/2024
TNPSC-DEPT. EXAM DEC-2024 , Last Date: 27-11-2024
TAMIL NADU PUBLIC COMMISSION
DEPARTMENTAL EXAMINATIONS
DEC-2024
NOTIFICATION
Applications are invited from the candidates through “ONLINE” only for admission to the Departmental Examinations – DEC - 2024
Name of the Examination : Departmental Examinations – DEC - 2024
Date of Notification : 7.11.2024
Date & Time of closing : 27.11.2024 till 11.59 P.M
🔰🔰🔰🔰🔰🔰
Apply Online
👇
https://apply.tnpscexams.in/public/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ==
Syllabus
👇
Time Table
👇
Previous year Question papers
👇
https://www.tnpsc.gov.in/English/departmental-questions.html
Results of Departmental Examinations
👇
https://www.tnpsc.gov.in/English/DResultView.aspx
ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள்
👇
🙏
🔰🔰🔰🔰
🌟🌟🌟
✅✅
🎯
🙏
12/11/2024
IIT-Kanpur launch 45-day crash course for JEE (Mains) aspirants.
IIT-Kanpur and education ministry launch 45-day crash course for JEE (Mains) aspirants.
11/11/2024
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான TRUST Exam. Last Date 20-11-2024
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 ஊரசுத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM),
டிசம்பர் 2024. தமிழ்நாடு ஊாகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்.
2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ /மாணவியர்கள் 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி (சளிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்படுகிறது.
1 அரசு ஆணை (நிலை) எண்.960, கல்வித் (இ2) துறை, நாள்.11.10.91-ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 2025 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு நகுதி உடையவராவார்கள்.
2. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.100,000/- மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
3.தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் 👇
👆
இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து. தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- என மொத்தமாக ரூ.10/-னை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்க 12.11.2024 முதல் 20.11.2024 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் 50 மாணவர்) 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000/- வீதம் வழங்கப்படும்.
குறிப்பு: நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள்
விண்ணப்பிக்க இயலாது
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை-6.
📣
📣📣
👇
Application From
🙏
05/11/2024
B.Ed(Special Education) TNOU -ல் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1-12-2024
பிஎட் சிறப்பு கல்வி படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் செந்தில்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக பிஎட் (சிறப்பு கல்வி) படிப்பை வழங்கி வருகிறது. மத்திய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியுடன் நடத்தப்படும் இப்படிப்பு, பிஎட் (பொது) படிப்புக்கு இணையானது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
2025ம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு டிசம்பர் 1ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnou.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு முடிவு மற்றும் கட் ஆப் மதிப்பெண் டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tomorrow (6/11/2024) CMTSE Result?
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும்,அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 04.08.2024 ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது 1,03,756 பேர் தேர்வெழுதினர்.
தேர்வில் 1000 மாணவர்கள்(மாணவர்கள் 500+ மாணவிகள்500) தெரிவு செய்யப்பட்டு இளநிலை பட்டப்படிப்பு வரை அவர்களுக்கு மாதம் ரூ.1000வீதம் ஒரு கல்வி ஆண்டிற்கு 10 மாதம் மட்டும் உதவித்தொகை ரூ 10,000/- வழங்கப்படும்.
நாளை 06.11.2024 இத்தேர்வெழுதிய மாணவர்கள் RESULTS வெளியிடப்படயுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியாகும் அதில் TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவொண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் மேலும் ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் இவ்விணையதளத்திலே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
👇
Results
👇
Tamilnadu Chief Minister
Talent Search
Examination
👇
Result
👇
Enter Reg. No
&
Date of Birth
👇
U get Result
🙏
IIT-Madras வழங்கும் குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சி.
Comprehensive Electronics & Embedded Systems. By IIT Madras.
This Program aims to inspire both students and industry partners to pursue career in Electronics and tackle challenging scientific problems relevant to societal needs and sustainable growth. It is proposed to provide hands-on training which is accompanied by background theory on the subject delivered by experts from IIT Madras. This program is accredited by IIT Madras. The course provides basic aspects of electronics and aimed at guiding young students towards career growth in electronics. It offers a strong emphasis on practical experience, with 80% hands-on training and 20% theory.
Vision:
To motivate young students by kindling their passion for creative and innovative thinking for the scientific and technological advancements in the country to fulfil the aspirations of the common people.
Eligibility:
Engineering/Diploma/Science(ongoing/completed) students
Participation certificate:
Certificate to be issued by SWAYAM Plus in association with IIT Madras Click here for the certificate template
Schedule of training:
Slot 1 : 9th Nov 24 to 17th Nov 24
Slot 2 : 25th Nov 24 to 3rd Dec 24
Slot 3 : 9th Dec 24 to 17th Dec 24
Course Fees : INR 8,000/- + GST
Credit Eligibility: NCrF Level 4.5
பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷனும் மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் பிளஸ்-சும் இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால செமிகண்டக்டர் பயிற்சியை அளிக்க உள்ளன. இதில், பொறியியல், அறிவியல்பட்டதாரிகள், பொறியியல் டிப்ளமாதாரர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பின்புலம் கொண்ட பட்டதாரிகள் சேரலாம். தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் சேர தகுதியுடையவர் ஆவர்.
இந்த பயிற்சிக்கான நேரடிவகுப்புகள் ஐஐடி வளாகத்தில் நடைபெறும். இதில் செமிகண்டக்டர் தொழில்குறித்து சொல்லித்தரப்படும். தொழில் நிறுவனங்களில் நேரடி பயிற்சியும் உண்டு. ஐஐடி வளாகத்திலேயே உணவு மற்றும் தங்கு வசதி உள்ளது.
வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு: இதற்கான ஒரு நாள் கட்டணம் ரூ.650. பயிற்சியை சிறப்பாக முடிப்போருக்கு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். முதலாவது பயிற்சி நவம்பர் 9 முதல் 17-ம் தேதி வரையும்,2-வது பயிற்சி நவம்பர் 25 முதல் டிசம்பர் 3 வரையும் 3-வது பயிற்சிடிசம்பர் 9 முதல் 17-ம் தேதி வரையும் அடுத்தடுத்து நடைபெறும். இந்த பயிற்சியில் சேரவிரும்பவோர் https://iitmpravartak.org.in/cees_course என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 94983 41969 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔰🔰🔰🔰
🙏
04/11/2024
NEET, JEE ,CUET தேர்வுகளுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச இணையவழி பயிற்சி.
NEET, JEE உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி: மத்திய அரசு வழங்குகிறது.
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு இணையதள வழியில் மத்திய அரசு இலவச பயிற்சி வழங்குகிறது.
நம்நாட்டில் எம்பிபிஎஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேரவும் ஜேஇஇ, கிளாட் போன்ற தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மாணவர்கள் தொடர் பயிற்சி பெற வேண்டிய நிலையுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் பணிகளை மத்திய கல்வி அமைச்சகமும் முன்னெடுத்துள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) சார்பில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கென பிரத்யேக சதீ (sathee) எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து பயிற்சி பெற்று பயன் அடைந்துள்ளதாக தெரிகிறது.
இதுதவிர க்யூட், கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகள், எஸ்எஸ்சி, வங்கி போன்ற பணித் தேர்வுகளுக்கும் பயிற்சி தரப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் https://sathee.prutor.ai/ என்ற இணையதளத்துக்கு சென்று எந்த தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமோ அதற்கு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். மேலும், அந்த இணையதளத்தின் கீழ் பகுதியில் நுழைவுத் தேர்வுகளுக்கு இன்னும் எத்தனை நாட்கள், எவ்வளவு நேரங்கள் உள்ளன என்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பயிற்சியில் இணைய👉https://sathee.prutor.ai/
🙏
📣அனைத்து📣
📣நண்பர்களுக்கும்📣
📣 பகிருங்கள். 📣
🎯
03/11/2024
TN-PGTRB க்கு புதிய பாடத்திட்டம்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி தேர்வு பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட உள்ளது. அடுத்த தேர்வு, புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் பணியில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக முதுகலை ஆசிரியர் தேர்வு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு, ஆகஸ்டில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, விரைவில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இறுதிசெய்யப்பட உள்ளது. அடுத்த தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.
புதிய
பாடத்திட்டம்
👇
👆
🔰🔰🔰🔰🔰
🙏
02/11/2024
SLET தேர்வை TN-TRB விரைவில் நடத்துகிறது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை டிஆர்பி விரைவில் நடத்த இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையும் (என்டிஏ) ஸ்லெட் தேர்வை அந்தந்த மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்தும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தகுதித் தேர்வை 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதைத்தொடர்ந்து, ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றுக்கொண்டது. தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, தொழில்நுட்பக் காரணங்களால் ஸ்லெட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வெழுத தயாராக இருந்த ஸ்லெட் தேர்வர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.
அதன் பிறகு 4 மாதங்கள் ஆகியும் ஸ்லெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஸ்லெட் தேர்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியமே தேர்வை நடத்தும். ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் அனைத்து தரவுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஸ்லெட் தேர்வை விரைவில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். முன்பு அறிவிக்கபட்டவாறு கணினிவழியில் நடத்தலாமா அல்லது ஒஎம்ஆர் ஷீட் வடிவில் நடத்தலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார்.
01/11/2024
IIT-JEE(Main) -2025, Last Date : 22-11-2024
🔰🔰🔰
❇️
Inviting Online Application Forms for Joint Entrance Examination (Main)-2025-Reg.
The Department of Higher Education, Ministry of Education, Government of India has entrusted the responsibility of conducting the Joint Entrance Examination (Main) to the NTA from 2019 onwards.
JEE (Main) comprises of two papers. Paper 1 (B.E./B. Tech.) is conducted for admission to Undergraduate Engineering Programs (B.E/B. Tech) at NITs, IIITs, other Centrally Funded Technical Institutions (CFTIs), Institutions/Universities funded/recognized by participating State Governments. It is also an eligibility test for JEE (Advanced), which is conducted for admission to IITs. Paper 2 of JEE (Main) is conducted for admission to B. Arch and B. Planning courses in the Country.
For Academic Session 2025-26, it has been decided that the JEE (Main)-2025 will be conducted in two Sessions ie. Session 1 (January 2025) and Session 2 (April 2025). The details for the Session 1 (January 2025) are given below:
✴️✴️✴️✴️✴️
Important Dates
👇
👇
🟡🟡🟡🟡🟡
Syllabus
👇https://thiruvaimaths.blogspot.com/2023/11/revised2024-jee-and-neet-syllabus.html
🔴🔴🔴🔴🔴
More Details
👇
🙏
28/10/2024
குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு.
ஏறத்தாழ 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஜூன் 18-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதமே வெளியாகும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, காலியிடங்களின் எண்ணிக்கை முதலில் 6,244 ஆக இருந்த நிலையில் பின்னர் முதல்கட்டமாக 480-ம் அதன்பிறகு மேலும் 2,208-ம் என கூட்டப்பட்டு 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். காரணம், காலியிடங்கள் அதிகரிக்கும்போது கட் ஆப் மதிப்பெண் குறையும்.இந்நிலையில், குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. அதோடு புதிதாக மேலும் 559 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் மேலும் கணிசமாக குறையும்.
Result👉❓👉https://tnpscresults.tn.gov.in/
24/10/2024
பொதுசேவை மையம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் சென்னை மண்டல அலுவலகம் அறிவிப்பு.
பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ள பொதுசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே உள்ள பொதுசேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஊழியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே உள்ள பொதுசேவை மையங்கள் குறித்த தகவல்களை https://locator.csccloud.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19/10/2024
தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தேர்வு முடிவுகளை சீக்கிரமாக வெளியிட திட்டம்
கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 2022-ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு எனும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வு தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 885 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், விடைத்தாள் திருத்துதல் பணிகளை துரிதமாக முடித்து முடிவுகளை விரைந்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
All the Best
🙏
போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அக்.21 கடைசி நாள்
போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 2020, 21, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ ஆகிய பொறியியல் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 341 பேர், பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிபிஎம் ஆகிய பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் 158 பேர் என மொத்தம் 499 பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.
அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த பயிற்சிகளை பெற விரும்புவோர் www.boat-srp.com என்ற இணையதளத்தில் அக்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வானோரின் பட்டியல் அக்.28-ம் தேதி மேற்கூறிய இணையதளத்தில் வெளியிடப்படும். நவ.13,14,15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் என்று