14/05/2026
10/05/2025
ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை பிளஸ் 2 துணை தேர்வு : மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை பிளஸ் 2 துணை தேர்வு: மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 வகுப்புக்கான துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வு துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ள தனி தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் மே 14 முதல் 29-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தத்கால் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.
விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்திதான் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🙏
07/12/2024
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தனித்தேர்வர்கள் DECEMBER 17 வரை விண்ணப்பிக்கலாம்.
##################
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தனித்தேர்வர்கள் DECEMBER 17 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்; தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடை பெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து, தனித்தேர்வர்கள் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுகால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
.................................................................................
MORE INFO. CLICK HERE FOR H.SC👉https://apply1.tndge.org/dge-notification/HRSEC
MORE INFO. CLICK HERE FOR SSLC👉https://apply1.tndge.org/dge-notification/SSLC
🙏



