30/07/2026

'ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

 ஆ​யுஷ்’ படிப்​பு​களுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க நாளை மறு​நாள் கடைசி நாள் ஆகும். சித்​தா, ஆயுர்​வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்​எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஎச்​எம்​எஸ்) பட்​டப்​படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்​ணப்​பம் கடந்த 13-ம் தேதி www.tnayushselection.org என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் தொடங்​கியது.

நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறும் இந்த 4 படிப்​பு​களுக்​கும் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீடு வழங்​கப்​படு​கிறது. இது​வரை 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஆன்​லைன் விண்​ணப்​பம் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணி​யுடன் நிறைவடைகிறது.


அதே​போல், இளநிலை யோகா மற்​றும் இயற்கை மருத்​துவ பட்​டப்​படிப்​புக்கு (பிஎன்​ஒய்​எஸ்) 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்கு www.tnayushselection.org என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது கடந்த 13-ம் தேதி தொடங்​கியது.

இதற்கு பிளஸ் 2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறும். இந்த படிப்​புக்கு இது​வரை 2,500 பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இதற்​கும் 31-ம் தேதி மாலை 5 மணி​யுடன் விண்​ணப்​பம் நிறைவடைகிறது. இந்த படிப்​புக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள்​ இடஒதுக்​கீடு கிடை​யாது.


🙏





நாளை +1/+2 Supplementary தேர்வு முடிவு வெளியாகிறது.

 




👆

Click Here

All the Best

🙏

22/07/2026

2027 ‘GATE' தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது



அடுத்த ஆண்​டுக்​கான ‘கேட்’ நுழைவுத் தேர்வை சென்னை ஐஐடி நடத்​துகிறது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-வது வாரத்​தில் தொடங்​கு​கிறது.

மத்​திய அரசின் கல்வி நிறு​வனங்​களில் எம்இ, எம்​டெக், எம்​எஸ்சி உள்​ளிட்ட முது​நிலைப் படிப்​பு​களில் சேர ‘கேட்’ (GATE) நுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது அவசி​யம். அதே​போல, ஒருசில தனி​யார் கல்வி நிறு​வனங்​கள், நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​களும் கேட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடத்​துகின்​றன. மத்​திய அரசின் ஒருசில பொதுத் துறை நிறு​வனங்​கள் கேட் மதிப்​பெண் அடிப்​படை​யில் பணி நியமனங்​களை​யும் மேற்​கொள்​கின்​றன.

கேட் தேர்வு மதிப்​பெண் 3 ஆண்டுக்கு செல்​லத்​தக்​கது. கேட் நுழைவுத் தேர்வை ஒவ்​வொரு ஆண்​டும் ஏதேனும் ஒரு ஐஐடி அல்​லது ஐஐஎஸ்சி (இந்​திய அறி​வியல் நிறு​வனம்) நடத்​தும். அந்த வகை​யில், வரும் 2027-ம் ஆண்​டில் கேட் தேர்வு நடத்​தும் பொறுப்பு சென்னை ஐஐடி​யிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதைத் தொடர்ந்​து, 2027 கேட் நுழைவுத் தேர்​வுக்​கான அறி​விப்பை சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்​டது. அதன்​படி, 2027 பிப்​.6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதி​களில் (சனி, ஞாயிறு) 30 பாடங்​களில் கேட் நுழைவுத் தேர்வு நடத்​தப்பட இருக்​கிறது. இத்​தேர்​வில் புதி​தாக ‘ரோ​போட்​டிக்ஸ் அண்ட் ஆட்​டோமேஷன்’ பாடம் சேர்க்​கப்படஉள்​ளது. தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-வது வாரத்​தில் தொடங்க உள்​ளது. முழு விவரங்​களை​யும் https://gate2027.iitm.ac.in என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் விரி​வாக அறிய​லாம் என்று சென்னை ஐஐடி அறி​வித்​துள்​ளது.

12/07/2026

‘ஆயுஷ்’ படிப்புக்கு நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்: இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அறிவிப்பு, கடைசி நாள்: 31-7-2026

 



சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் ஆகிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது www.tnayushselection.org என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நாளை (ஜூலை 13) தொடங்குகிறது. இம்மாதம் 31-ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப் பிக்கலாம்.

நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்போது, நீட் தேர்வு ஹால் டிக்கெட் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம், நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் மத்திய அரசிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்றுக் கொள்ளப்படும்.


யோகா - இயற்கை மருத்துவம்: சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளும், 20 தனியார் கல்லூரிகளும் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் பட்டப் படிப்புக்கும் (பிஎன்ஒய்எஸ்) மேற்கண்ட இணையதளத்தில் நாளை முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு இதற்கு கிடையாது.

சிறப்பு பிரிவினருக்கு.. மேற்கண்ட 5 வகையான ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு சிறப்பு பிரிவில் (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) விண்ணப்பிப்பவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து, ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

02/07/2026

பகுதிநேர பிஇ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு.கடைசி நாள் ஜூலை 15.

 

தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் 6 அரசு பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் 2 அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​களில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்​கள் உள்​ளன. இதில், பொறி​யியல் டிப்​ளமா முடித்து குறைந்​த​பட்​சம் ஓராண்டு பணிபுரிந்த அல்​லது பணிபுரிந்து வருபவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்.

நடப்பு கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 15-ல் தொடங்கியது. கடைசி நாள் ஜூலை 15-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை www.ptbe-tnea.com என்ற இணை​யதளத்​தில் அறியலாம்.