Search This Blog

Showing posts with label Holiday. Show all posts
Showing posts with label Holiday. Show all posts

23/11/2024

List Of TN Govt Holidays.


 ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாள்களை அறிவிக்கும். அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08-06-1957 நாளிட்ட பொது-1 20-25-26ஆம் எண் அறிவிக்கையின் படி 1881ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) 25ஆம் பிரிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.


  • ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை
  • ஜனவரி 14 பொங்கல் பண்டிகை - செவ்வாய்க் கிழமை
  • ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் - புதன் கிழமை
  • ஜனவரி 16 உழவர் திருநாள் - வியாழக் கிழமை
  • ஜனவரி 26 குடியரசு தினம் - ஞாயிற்றுக் கிழமை
  • பிப்ரவரி 11 தைப்பூசம் - செவ்வாய்க் கிழமை
  • மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு - ஞாயிற்றுக் கிழமை
  • மார்ச் 31 ரம்ஜான் - திங்கள் கிழமை
  • ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு நிறுவனங்கள் - செவ்வாய்க் கிழமை
  • ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி - வியாழக்கிழமை
  • ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம் - திங்கள் கிழமை
  • ஏப்ரல் 18 புனித வெள்ளி - வெள்ளிக் கிழமை
  • மே 1 மே தினம் - வியாழக்கிழமை
  • ஜூன் 7 பக்ரீத் - சனிக்கிழமை
  • ஜூலை 6 மொகரம் - ஞாயிற்றுக் கிழமை
  • ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் - வெள்ளிக் கிழமை
  • ஆகஸ்ட் 16 கிருஷ்ண ஜெயந்தி - சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி - புதன் கிழமை
  • செப்டம்பர் 5 மிலாதுன் நபி - வெள்ளிக் கிழமை
  • அக்டோபர் 1 ஆயுத பூஜை - புதன் கிழமை
  • அக்டோபர் 2 விஜயதசமி / காந்தி ஜெயந்தி - வியாழக்கிழமை
  • அக்டோபர் 20 தீபாவளி - திங்கள் கிழமை
  • டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் - வியாழக் கிழமை.




டாப்பில் ஜனவரி:


2025 ஆம் ஆண்டில் மாதங்களில், அதிக விடுமுறை நாட்கள் உள்ள மாதமாக ஜனவரி உள்ளது. ஜனவரியில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி - ஞாயிறு விடுமுறை தினங்கள் வேறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


நவம்பர் மாதத்தில் சனி ஞாயிறை தவிர ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு தினங்கள்:


பொங்கல் பண்டிகையானது செவ்வாய்க் கிழமையான ஜனவரி 14 அன்றும் , திருவள்ளூர் தினம், புதன்கிழமையான ஜனவரி 15,  அன்றும், அதை தொடர்ந்து ஜனவரி 16 உழவர் தினம் வியாழக்கிழமை அன்றும் வரவுள்ளது. ஒருவேளை , அரசு மனது வைத்தால், வெள்ளிக்கிழமையும் கூடுதலாக விடுமுறை அளித்து சனி - ஞாயிறு விடுமுறை சேர்த்து அளிக்குமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 



  • தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • ரம்ஜான் பண்டிகையானது, மார்ச் 31 வரவுள்ளதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • புனித வெள்ளி ஏப்ரல் 18 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விவரங்களுக்கு அரசு ஆணை 792👉Click here

🙏

17/12/2023

கனமழை காரணமாக நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.




03/12/2023

2024_அரசு விடுமுறை நாட்கள்.

2024

 தமிழ்நாடு 

அரசு விடுமுறை நாட்கள். 

🔰🔰🔰

🙏



23/11/2023

இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

🌂🌂🌂🌂🌂🌂🌂🌂

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள். 

☔☔☔☔☔☔☔☔☔

நெல்லை , குமரி , தென்காசி , தூத்துக்குடி, புதுக்கோட்டை , விருதுநகர், நீலகிரி. தேனி. 



23/10/2022

25/10/2022 அன்று அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு.

 


தமிழ்நாடுஅரசு வெளியிட்ட அறிவிப்பில், 'இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


Happy Deepavali


✴️✴️✴️✴️✴️
🌸🌸🌸
🎇🎇
🎈
🙏