Search This Blog

23/11/2024

List Of TN Govt Holidays.


 ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாள்களை அறிவிக்கும். அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08-06-1957 நாளிட்ட பொது-1 20-25-26ஆம் எண் அறிவிக்கையின் படி 1881ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXVI/1881) 25ஆம் பிரிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாள்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.


  • ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை
  • ஜனவரி 14 பொங்கல் பண்டிகை - செவ்வாய்க் கிழமை
  • ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் - புதன் கிழமை
  • ஜனவரி 16 உழவர் திருநாள் - வியாழக் கிழமை
  • ஜனவரி 26 குடியரசு தினம் - ஞாயிற்றுக் கிழமை
  • பிப்ரவரி 11 தைப்பூசம் - செவ்வாய்க் கிழமை
  • மார்ச் 30 தெலுங்கு வருடப் பிறப்பு - ஞாயிற்றுக் கிழமை
  • மார்ச் 31 ரம்ஜான் - திங்கள் கிழமை
  • ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு நிறுவனங்கள் - செவ்வாய்க் கிழமை
  • ஏப்ரல் 10 மகாவீரர் ஜெயந்தி - வியாழக்கிழமை
  • ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம் - திங்கள் கிழமை
  • ஏப்ரல் 18 புனித வெள்ளி - வெள்ளிக் கிழமை
  • மே 1 மே தினம் - வியாழக்கிழமை
  • ஜூன் 7 பக்ரீத் - சனிக்கிழமை
  • ஜூலை 6 மொகரம் - ஞாயிற்றுக் கிழமை
  • ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் - வெள்ளிக் கிழமை
  • ஆகஸ்ட் 16 கிருஷ்ண ஜெயந்தி - சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி - புதன் கிழமை
  • செப்டம்பர் 5 மிலாதுன் நபி - வெள்ளிக் கிழமை
  • அக்டோபர் 1 ஆயுத பூஜை - புதன் கிழமை
  • அக்டோபர் 2 விஜயதசமி / காந்தி ஜெயந்தி - வியாழக்கிழமை
  • அக்டோபர் 20 தீபாவளி - திங்கள் கிழமை
  • டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் - வியாழக் கிழமை.




டாப்பில் ஜனவரி:


2025 ஆம் ஆண்டில் மாதங்களில், அதிக விடுமுறை நாட்கள் உள்ள மாதமாக ஜனவரி உள்ளது. ஜனவரியில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி - ஞாயிறு விடுமுறை தினங்கள் வேறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


நவம்பர் மாதத்தில் சனி ஞாயிறை தவிர ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு தினங்கள்:


பொங்கல் பண்டிகையானது செவ்வாய்க் கிழமையான ஜனவரி 14 அன்றும் , திருவள்ளூர் தினம், புதன்கிழமையான ஜனவரி 15,  அன்றும், அதை தொடர்ந்து ஜனவரி 16 உழவர் தினம் வியாழக்கிழமை அன்றும் வரவுள்ளது. ஒருவேளை , அரசு மனது வைத்தால், வெள்ளிக்கிழமையும் கூடுதலாக விடுமுறை அளித்து சனி - ஞாயிறு விடுமுறை சேர்த்து அளிக்குமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 



  • தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • ரம்ஜான் பண்டிகையானது, மார்ச் 31 வரவுள்ளதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • புனித வெள்ளி ஏப்ரல் 18 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விவரங்களுக்கு அரசு ஆணை 792👉Click here

🙏

No comments:

Post a Comment