Search This Blog

23/11/2024

CBSE-10 & 12 Public Exam Timetable Released.

  


புதுடெல்லிசிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு (2024-25) கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்வுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக, விரிவான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 18-ம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வுகளை சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சில தொழில்நுட்ப பாடத் தேர்வுகள் மட்டும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடத்தப்படும்.

12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி முடித்து, உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக ஏதுவாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.cbse.gov.in இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


Time Table👉Click Here


All the Best


🙏





No comments:

Post a Comment