பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ள பொதுசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே உள்ள பொதுசேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஊழியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் அருகே உள்ள பொதுசேவை மையங்கள் குறித்த தகவல்களை https://locator.csccloud.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment