தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதி கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவ.1ம் தேதி அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவ.9ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கபடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.31 வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் நவம்பர் 1 (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் சனி, ஞாயிறையும் சேர்த்து பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் திட்டமிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🎆🎆🎆🎆
✴️✴️✴️
🙏
No comments:
Post a Comment