Search This Blog

Showing posts with label CMTSE. Show all posts
Showing posts with label CMTSE. Show all posts

05/06/2024

+1 மாணவர்களுக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு ஜூலை 21 தேதி நடைபெற உள்ளது.

🔰🔰🔰🔰🔰🔰

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: ஜூலை 21-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது


இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.


அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசின் 9, 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும்,முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.


இந்த தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும். தேர்வெழுத விருப்பமுள்ளவர்கள்

 www.dge.tn.gov.in 

என்ற இணையதளத்தில் ஜூன்11-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டணமாக ரூ.50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


🔰🔰🔰🔰🔰🔰


🙏







02/08/2023

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு,அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்து கொண்டிருப்பவர்கள்.கடைசி நாள்: 18-8-2023.

 



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு, செப்டம்பர் 2023

கடைசி நாள்: 18-8-2023. 


அறிவிப்பு


அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.


தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும்.


23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு 2023-2024- ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50/- சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 18.08.2023.


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய👉 www.dge.tn.gov.in


🔰🔰🔰🔰🔰


🙏