Search This Blog

21/07/2022

TNPSC Group I Announced, Last Date :22/8/2022

 துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27ந்தேதி முதல் 29ந் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். வரும் அக்டோபர் 30-ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Apply online👉www.tnpsc.gov.in


🙏


JEE Mains second session will be held from July 25 onwards. Admit card Released.

 

JEE Main 2022: The JEE Mains second session will be held from July 25 onwards. The candidates will soon be able to download their admit cards at the official website jeemain.nta.nic.in


🙏


15/07/2022

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசிநாள்:18/7/2022 ஆக நீட்டிப்பு.

 உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

14/07/2022

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Download hall ticket

👇

https://www.tnpsc.gov.in/

🙏




உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு. கடைசி நாள்: 5/8/2022

 


உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்  ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்: 5/8/2022.


சென்னை: தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2022-23ம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. விண்ணப்பங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வலைத்தளத்தில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.


உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப்படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள், தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு அனுப்பப்பெறுதல் வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 5ம் தேதி ஆகும். மேலும் கூடுதல் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


👉மாணவர் சேர்க்கை விவர கையேடு


🙏



12/07/2022

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை . கடைசி நாள்: 29/7/2022


 



ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.


இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப்பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 12.07.2022 முதல்‌ 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த நிகழ்வினை சட்டம்‌, நீதிமன்றங்கள்‌, சிறைச்சாலைகள்‌ மற்றும்‌ ஊழல்‌ தடுப்புச்‌ சட்டத்‌ துறை அமைச்சர்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தர்‌ எஸ்‌.ரகுபதி இன்று (12.07.2022) காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைத்தார்.

மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும்‌ முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்‌ தேதிகள்‌ பல்கலைக்கழக இணையதளத்தில்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்.‌"

இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளுக்கும் இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசித் தேதி ஆகும்.

அதேபோல தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகிய இடங்களில் பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் இன்று முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.tndalu.ac.in/


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.



11/07/2022

NEET UG Hall Ticket Release Today 11.30 am at neet.nta.nic.in .

 


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மே மாதம் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீட் தேர்வுக்கு 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 பெண்கள், 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 ஆண்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுதுகிறார்கள்.

இந்த புள்ளி விவரங்களை கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகமான பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் ஒருவாரமே முழுமையாக உள்ளதால், தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதற்கேற்றபடி, https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வழக்கமாக தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதில், குளறுபடிகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை எப்படி தேர்வு மையங்கள் அமைத்து இருக்கின்றன? என்பது இன்று தெரிந்துவிடும்.


நாளை Hall ticket வெளியிட பட இருக்கிறது. 


பதிவிறக்கம் செய்ய

👇


https://neet.nta.nic.in/


All the Best. 


🙏

08/07/2022

பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது.

 


தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் அரசின் வேலைவாய்ப்பு துறை அலுவலகங்களில் தங்களை பதிவு செய்து வைப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும் போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் செய்யப்படும்.

இதனுடன், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாட்களில் இருந்து வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு எண் அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும், இனி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான

 www.tnvelaivaaaippu.gov.in

என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.



Register on-line 

👇

www.tnvelaivaaaippu.gov.in

🙏


CBSE RESULT தாமதத்தால் பொறியில் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ஆம் தேதி கடைசி நாளாக நீட்டிப்பு.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 08) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய நேற்று (ஜூலை 07) கடைசி நாள். பொறியில் படிப்பிற்கு விண்ணப்பம்  17ஆம் தேதி கடைசி நாள்.

ஆனால், இன்னும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அந்த மாணவர்களும் பயனடைய வேண்டும். அதன் பொருட்டு CBSE தேர்வு வெளியாகும் வரை காலநீட்டிப்பு செய்கிறோம். சிபிஎஸ்சி ரிசல்ட் தேதி தெரியாத நிலையில் அவற்றிற்கான ரிசல்ட் வெளியான பின்னர் ஐந்து நாள்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் நாள் குறிப்பிடாமல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் தோல்வி ஏற்பட்டு இருந்தாலும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாது. கரோனா காலம் என்பதால் இந்த சிக்கல், அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதில் ஆளுநர் தான் தேதி ஒதுக்க வேண்டும்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வு முடிவு வந்து இருக்கிறது. இனி கவுன்சிலிங் நடப்பதற்கான தேதிகளை உயர்கல்வி துறை வெளியிடும். 3 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதி பொறுத்து தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள் தரம் குறைவாக இருப்பதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்வார்கள். உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் தரத்தை கண்காணிக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து அவைகள் ஆய்வு செய்யப்பட்டு பின் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.


481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல்

 



481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல்

ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது.

இந்த சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியாகின. அன்றில் இருந்தே பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1.51 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள KKC தனியார் பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

2-ஆவது இடத்தில் குரோம்பேட்டை எம்ஐடி வளாகக் கல்லூரி இடம் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தனியார் கல்லூரியும், 4ஆவது இடத்தில் செங்கல்பட்டு சிவசுப்பிரமணிய நாடார் (எஸ்எஸ்என்) தனியார் கல்லூரியும் உள்ளன.

அதேபோல, கோயம்புத்தூர் சிஐடி கல்லூரி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 6ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் தனியார் கல்லூரியும் 7ஆவது இடத்தில், கோயம்புத்தூர் சிஐடி கல்லூரியும் உள்ளன.

PSG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி 8ஆவது இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் கல்லூரி 9ஆவது இடத்திலும் கோயம்புத்தூர் குமரகுரு தனியார் கல்லூரி 10ஆவது இடத்திலும் உள்ளன.

அதேபோல 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓசி பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் கல்லூரி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தரவரிசை

பட்டியல்

👇

https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf



🙏



07/07/2022

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. கடைசி நாள்: 8/8/2022


 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்து கொண்டு நடப்பு கல்வியாண்டில் (2022-23) மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புல முதல்வர்கள், இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பங்குபெற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் 08.08.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.annamalaiuniversity.ac.in


Apply  online All Streams 

👇

https://annamalaiuniversity.ac.in/adm/index.php


Five year integrated pg course's

👇

https://annamalaiuniversity.ac.in/adm/pgint_courses.php



🙏



ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம். Last Date: 8/8/2022


மீன்வளப் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா பெயரில் அழைக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமைந்துள்ளன. 11 கல்லூரிகளும் 47 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 600 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1,500 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc)
இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc) மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.

அவை முறையே,

பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (FITT) சென்னை ஆகும்.

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதோடு மீன்வளத் துறையின் உள்ள தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க பல தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இப்பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும்

ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வளப் படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம்.

படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா ன்வளப் பல்கலைக்கழகத்தின் www.tnfu.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மீன்வளப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க http://tnjfu.ac.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் 04365-240449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Apply online 👉 http://tnjfu.ac.in



🙏



அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 62 சதவீத மாணவர்கள் தோல்வி

 


அண்ணா பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: 38 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.

06/07/2022

TET-1 உத்தேச தேதி:ஆகஸ்டு 25 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


 

TET-1 உத்தேச தேதி:ஆகஸ்டு 25 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வ வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

 மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்

🔰🔰🔰🔰🔰


🙏



04/07/2022

Apply M. E / M.Tech Admission . Last Date:3/8/2022.

 


சென்னை: எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இது குறித்து அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்இ, எம்டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும், எம்.ஆர்க் முதுநிலை படிப்புக்குமான தமிழ்நாடு பொது நுழைவு சேர்க்கை (TANCA) நடத்தப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பதிவு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணைய தளம் வாயிலாக வருகிற ஆக.3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ் நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துறைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ''The Director (Admissions), Anna University, Chennai 600 025'' என்ற முகவரிக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ''The Principal, Government College of Technology, Thadagam Road, Coimbatore 641 013'' என்ற முகவரிக்கும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

2022 டான்செட் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது 2020, 21, 22 ஆகிய ஆண்டுகளில் தொடர்புடைய பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் அல்லது 2020, 21, 22 ஆகிய ஆண்டுகளில் தொடர்புடைய பொறியியல்/ வாழ்க்கை அறிவியல் துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

👉 Apply online


Last Date: 3/8/2022


TN-TRB RELEASE PGTRB:2021-2022 EXAMINATION RESULT WITH FINAL KEY.



    Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I -2020-2021

 RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY


To download the result follow the steps given below:-

              Step 1 – Click Login

              Step 2 – Enter User ID and password

              Step 3 – Click Dashboard

              Step 4 – Click here to download score card

             Utmost care has been taken in preparing the provisional mark list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

              Date: 04.07.2022



Click here for result



Click here for Final key


🙏











நவோதயா பள்ளிகளில் 1616 காலிப்பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22/7/2022.

 


இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி வழங்கும் விதமாக மத்திய அரசினால் நவோதயா பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதியினால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது ஒவியம், இசை, நூலகர், உடற்கல்வி போன்ற துறைகளில் பணியாற்ற ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என சுமார் 1616 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நவோதயா பள்ளியில் காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 1,616

துறை ரீதியான காலிப்பணியிட விபரங்கள்:

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்683
முதுகலை பட்டதாரி ஆசிரியர்397
இதர ஆசிரியர்கள்181
பள்ளி முதல்வர்12

Notification👉Click Here


வணிகவியல் பட்டயப் படிப்பை (டி.காம்) முடித்தவர்கள் இனி பி.காம். 2-ம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம்.!

 


சென்னை: வணிகவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் டி.காம். (Diploma in Commercial Practice) பட்டயப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று பேராசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சூடுபிடித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக பி.காம். படிப்புக்கான மவுசு உயர்ந்து வருவதால் அதில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கையில் வணிகவியல் பாடமே முன்னிலை வகிக்கிறது.

இதன் காரணமாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குகூட பள்ளி, கல்லூரிகளில் வணிகவியல் பாடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் வணிகவியல் பட்டயப் படிப்பை (டி.காம்) முடித்தவர்கள் இனி பி.காம். 2-ம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது பி.காம். படிப்பை குறிவைத்து படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு என்று பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில வணிகக்கல்வி பயிலகத்தின் முதல்வர் கா.முத்துக்குமார் கூறியதாவது: பிளஸ்-2 முடித்த 2 லட்சம் மாணவர்கள் பி.காம். படிப்பில் சேர விரும்புகின்றனர். ஏனெனில், பி.காம். முடித்தவர்களுக்கு எளிதில் உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

எனினும், அதிகளவில் சேர்க்கை இடங்கள் இல்லாததால் பலர் விருப்பம் இருந்தும் வேறு படிப்புகளை தேர்வுசெய்ய வேண்டிய சூழல் உள்ளது. அத்தகைய பி.காம். படிப்பில் எளிதாக சேர தற்போது டி.காம். பட்டயக் கல்வி வழிவகை செய்கிறது.

தமிழகத்தில் டி.காம். பட்டய படிப்பு 50 ஆண்டுகளுக்கு மேலாக கற்றுத் தரப்படுகிறது. பி.காம். படிப்பின் பாடங்களை ஒத்திருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணிப் பயிற்சி (டேலி, டிடிபி) ஆகியவையும் இதனுடன் சேர்த்து பயிற்றுவிக்கப்படுவதால் அரசு, தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் டி.காம்.

முடித்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. டி.காம். படித்த 80 சதவீதம் பேர் தற்போது நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அதேபோல், டி.காம். படிக்கும் மாணவர்கள் பெறும் பட்டய சான்றிதழ் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் கணக்கியல், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து உட்பட அரசுத் தேர்வுகளுக்கு இணையானதாகவும் கருதப்படும்.

மிக முக்கியமாக ஆண்டு கல்லூரி கட்டணம் ரூ.2500 தான் என்பதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிக்கல் இருக்காது. மேலும், அரசு நலத்திட்டங்கள், உதவித் தொகைகள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

இதுதவிர மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்பினால் தங்களுக்குப் பிடித்த கல்லூரியில் பி.காம். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம்.

இதற்காக அனைத்துவித கல்லூரிகளிலும் பி.காம். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு கூடுதலாக 10 சதவீதம் இடங்கள் ஏற்படுத்திக்கொள்ள உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த டி.காம். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதலாமாண்டு சேர்க்கை பெற பத்தாம் வகுப்பிலும், நேரடி 2-ம் ஆண்டு சேர பிளஸ்-2 வணிகவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த படிப்பு தமிழகத்தில் சென்னை மாநில வணிகக் கல்விப் பயிலகம் (இருபாலர்), தர்மாம்பாள் அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஊட்டியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர்) மற்றும் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர்) ஆகியவற்றில் உள்ளது.

மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 




03/07/2022

PART TIME B.E. ADMISSIONS 2022-2023, Registration Starts:4/7/2022, Last Date 3/8/2022


 PART TIME B.E. ADMISSIONS 2022-2023,

 Registration Starts:4/7/2022, 

Last Date 3/8/2022


சென்னை: பகுதி நேர பி.இ பட்டப்படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்களாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அவை முறையே அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 013, அரசினர் பொறியியற் கல்லூரி சேலம் - 636 011, அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி - 627 007, அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, காரைக்குடி - 630 004, தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் - 632 002, அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் - 635 104, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் - 641 014, தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை - 625 015 ஆகும். இதற்கான தகுதி, விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும்.  மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.    

விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இதற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் நாளை (04.07.2022)  துவங்குகிறது. முடிவுறும் நாள் 3.8.2022 ஆகும். மேலும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (டிஎப்சி) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து டிஎப்சி மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.  மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 0422-2590080, 9486977757 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.. 


Apply online👉 www.ptbe-tnea.com

10 STD, MINIMUM LEARNING STUDY MATERIAL / SLOW LEARNERS STUDY MATERIAL, ALL SUBJECTS.

👇


Click Here


🔰🔰🔰🔰🔰🔰🔰



🙏