ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.
இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 12.07.2022 முதல் 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இந்த நிகழ்வினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் எஸ்.ரகுபதி இன்று (12.07.2022) காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைத்தார்.
மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்."
இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளுக்கும் இன்று முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க வரும் 29ம் தேதி கடைசித் தேதி ஆகும்.
அதேபோல தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் சரஸ்வதி சட்டக் கல்லூரி ஆகிய இடங்களில் பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் இன்று முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment