Search This Blog

30/07/2022

காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுக்கு முதல் தங்கம்



 பர்மிங்ஹாம்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இரண்டாவது நாளான இன்று இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றது. இன்று நடந்த பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். குருராஜா என்பவர் வெண்கலம் வென்றிருந்தார்.

முதல் தங்கப் பதக்கம்

இதனிடையே, இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மொத்தம் 198 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார். ஸ்நாட்ச் பிரிவில் மற்ற வீராங்கனைகள் 80 கிலோ வரை எடையை தூக்க, மீராபாய் சானு முதல் முயற்சியிலேயே 84  எடையை தூக்கி அசத்தினார்.



மூன்றாவது முயற்சியில் 90 கிலோ எடையை தூக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. என்றாலும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவு உட்பட ஒட்டுமொத்தமாக 198 கிலோ எடையை தூக்கி பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்க மங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment