Diploma படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
டிப்ளமோ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பு செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பி.இ., கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிறது 27ந் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த மாணவர்களும், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
அதன்படி 12ம் வகுப்பு தேர்வு முடிவை சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று வெளியிட்டதை தொடர்ந்து உயர்கல்வித் துறை சார்பில் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment