மீன்வளப் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம், 2012இன் படி நிறுவப்பட்டது. இது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா பெயரில் அழைக்கப்படுகிறது.
நாகப்பட்டினத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆய்வு மையங்கள் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமைந்துள்ளன. 11 கல்லூரிகளும் 47 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 600 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1,500 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.
ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், நான்காண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (பி. எப். எஸ்சி - B.F.Sc)
இரண்டாண்டு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம் (எம். எப். எஸ்சி - M.F.Sc) மூன்றாண்டு முனைவர் பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பிற இரண்டு மையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.
அவை முறையே,
பணியாளர் பயிற்சி நிறுவனம், சென்னை
மீன்வள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (FITT) சென்னை ஆகும்.
ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் குறித்தான படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதோடு மீன்வளத் துறையின் உள்ள தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க பல தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இப்பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும்
ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன்வளப் படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை (ஜூலை 8) முதல் விண்ணப்பிக்கலாம்.
படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா ன்வளப் பல்கலைக்கழகத்தின் www.tnfu.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மீன்வளப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க http://tnjfu.ac.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் 04365-240449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Apply online 👉 http://tnjfu.ac.in
🙏
No comments:
Post a Comment