Search This Blog

Showing posts with label Employment Registeration. Show all posts
Showing posts with label Employment Registeration. Show all posts

08/07/2022

பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படுகிறது.

 


தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் அரசின் வேலைவாய்ப்பு துறை அலுவலகங்களில் தங்களை பதிவு செய்து வைப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும் போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் செய்யப்படும்.

இதனுடன், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாட்களில் இருந்து வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு எண் அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும், இனி பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவது நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான

 www.tnvelaivaaaippu.gov.in

என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.



Register on-line 

👇

www.tnvelaivaaaippu.gov.in

🙏