இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி வழங்கும் விதமாக மத்திய அரசினால் நவோதயா பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதியினால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது ஒவியம், இசை, நூலகர், உடற்கல்வி போன்ற துறைகளில் பணியாற்ற ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் என சுமார் 1616 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளியில் காலிப்பணியிட விபரங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள் - 1,616
துறை ரீதியான காலிப்பணியிட விபரங்கள்:
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் | 683 |
முதுகலை பட்டதாரி ஆசிரியர் | 397 |
இதர ஆசிரியர்கள் | 181 |
பள்ளி முதல்வர் | 12 |
Notification👉Click Here