Search This Blog

Showing posts with label TNEA-2022. Show all posts
Showing posts with label TNEA-2022. Show all posts

08/07/2022

CBSE RESULT தாமதத்தால் பொறியில் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ஆம் தேதி கடைசி நாளாக நீட்டிப்பு.


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 08) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய நேற்று (ஜூலை 07) கடைசி நாள். பொறியில் படிப்பிற்கு விண்ணப்பம்  17ஆம் தேதி கடைசி நாள்.

ஆனால், இன்னும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அந்த மாணவர்களும் பயனடைய வேண்டும். அதன் பொருட்டு CBSE தேர்வு வெளியாகும் வரை காலநீட்டிப்பு செய்கிறோம். சிபிஎஸ்சி ரிசல்ட் தேதி தெரியாத நிலையில் அவற்றிற்கான ரிசல்ட் வெளியான பின்னர் ஐந்து நாள்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் நாள் குறிப்பிடாமல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் செமஸ்டர் ஆன்லைன் தேர்வில் தோல்வி ஏற்பட்டு இருந்தாலும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாது. கரோனா காலம் என்பதால் இந்த சிக்கல், அடுத்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதில் ஆளுநர் தான் தேதி ஒதுக்க வேண்டும்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வு முடிவு வந்து இருக்கிறது. இனி கவுன்சிலிங் நடப்பதற்கான தேதிகளை உயர்கல்வி துறை வெளியிடும். 3 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதி பொறுத்து தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள் தரம் குறைவாக இருப்பதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்வார்கள். உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் தரத்தை கண்காணிக்கவும், உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து அவைகள் ஆய்வு செய்யப்பட்டு பின் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்தார்.


20/06/2022

B.E/B.Techஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிவிட்டது. கடைசிநாள். ஜுலை 19.

12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப்  https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தொடங்க உள்ளது. மேலும் மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.


இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.கலந்தாய்வு விபரம்மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

Apply online👉https://www.tneaonline.org/


08/06/2022

பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்__அமைச்சர் பொன்முடி .

பொறியியல் படிப்புகளுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. 

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



பொறியியல் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு 20-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினம் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கும். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19-ம் தேதி இறுதி நாள். 22-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும்.

ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்.

 ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

🙏