Search This Blog

Showing posts with label tnea. Show all posts
Showing posts with label tnea. Show all posts

10/07/2024

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடக்கம்

 




பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இந்நிலையில், தகுதியான மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12-ம் தேதி நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1 லட்சத்து 99,868 விண்ணப்பங்கள் தகுதி உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் ஆணையர் வீரராகவ ராவ் பொறியியல் மாணவச் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.அதன்படி, பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொசிதா லட்சுமி என்ற மாணவி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதேபோல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராவினி என்ற மாணவி முதலிடத்தையும், கோயமுத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த கிருஷ்ணா அனுப் இரண்டாம் இடத்தையும், வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சரவணன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


இந்த ஆண்டு பொறியியல் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதில், 58 பேர் மாநில பாடப்பிரிவுகளிலும் 7 பேர் இதர பாடப்பிரிவுகளிலும் படித்தவர்கள். இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22 -ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும், கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்களில் எண்ணிக்கை ஜூலை 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







20/06/2022

B.E/B.Techஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிவிட்டது. கடைசிநாள். ஜுலை 19.

12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப்  https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தொடங்க உள்ளது. மேலும் மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக 110 மையங்கள் மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.


இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரேண்டம் எண் ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரையிலான தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.கலந்தாய்வு விபரம்மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

Apply online👉https://www.tneaonline.org/