Search This Blog

28/06/2023

பகுதி நேர பொறியியல் படிப்பு.. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:23-7-2023.


பகுதி நேர பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள 6 அரசு பொறியியல் கல்லுாரிகள், 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில் 4 ஆண்டு பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.


https:www.ptbe-tnea.com/ என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூலை 23ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கலந்தாய்வு ஆன்லைனில் மூலம் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பகுதி நேர படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


More details

 and 

Online Application

👇

https://www.ptbe-tnea.com/index.php#importants

🙏



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும்மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த இடங்களுக்கு 2023 -24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூன் 28-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.

இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுவிண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ)நீட்டித்துள்ளது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளங்களை பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ்முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

27/06/2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.கடைசி நாள்: 10-7-2023

 


தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.


நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வில் 78 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க

👇

www.tnhealth.tn.gov.in



ஒருநாள் கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு

 



26/06/2023

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வி, வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வி, வேலை வழிகாட்டுதல் படிப்புக்கு வரும் 30-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் மாணவர்களுக்கு முன் கூட்டியே தேவையான வழிகாட்டுதல்களை வழங்க போதிய கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர்கள் இருந்தால், எவ்வித அழுத்தமும் இன்றி அவர்கள் தங்களின் துறையை தேர்வு செய்யவும், அதற்கு உண்டான வழிகாட்டுதலை பெறவும் ஏதுவாக இருக்கும்.

மாணவர்களுக்கு பல திறன்கள் இருந்தும் அந்த திறன்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் இல்லாததால் அவர்களுக்கு எத்துறையை தேர்வு செய்வது எந்த வேலைக்கு செல்வது, தொழில் முனைவோராகலாமா, போட்டி தேர்வுக்கு தயாராகலாமா அல்லது உடனடியாக வேலைக்கு போவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாத காரணத்தினால் மூன்று ஆண்டு முடிவில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரும் போது, அவர்களால் தனக்கு தேவையான துறையை உடனடியாக அடைய முடியாத சூழ்நிலை உள்ளது.

ஒவ்வொரு கல்லூரிகளிலும் குறைந்த பட்சமாக 1,000 மாணவர்களுக்கு ஒரு கல்வி மற்றும் வேலை வழிகாட்டி வல்லுநர் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த வழிகாட்டுதலை வழங்க முடியும். ஏற்கெனவே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அலுவலர் அமர்த்தப்பட்டுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டுதல் கல்வி இருந்தால் மட்டுமே அவர்களால் ஒரு மாணவனை அடுத்த நிலைக்கு தயார் செய்ய முடியும்.

எனவே, இதுபோன்ற சவால்களை சமாளிக்கவும் தேவையான வழிகாட்டுதலுக்கு உண்டான படிப்பை வழங்கவும் பாரதியார் பல்கலைக்கழக வேலை வழிகாட்டி துறையின் சார்பாக இரண்டு ஆண்டு முதுகலை கேரியர் கைடன்ஸ் மற்றும் ஓராண்டு பட்டய படிப்பான கேரியர் கைடன்ஸ் ஃபார் எக்ஸிக்யூடிவ்ஸ் (இணையவழி) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர ஏதாவது ஓர் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு இணையவழி பட்டயப்படிப்புக்கு முக்கியமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் https://b-u.ac.in/146/pg-admission என்ற இணைய தளத்தில் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளை படித்த மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் கேரியர் கைடாகவும், கல்லூரிகளில் வேலை வாய்ப்பு அலுவலராகவும், நிறுவனங்களில் பயிற்சியாளர் மற்றும் ஹெச்ஆர் துறையிலும் வேலை பார்க்கலாம்.

மேலும் மாணவர்கள் சொந்தமாக வழிகாட்டுதல் மையத்தையும் தொடங்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2428239, 95650015656, 9566849767 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Apply online

👇

https://b-u.ac.in/146/pg-admission

🙏



பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்தஇடங்களில் 2023–24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம்தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியாக உள்ளது. மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.

தரவரிசை பட்டியல் காண

👇

www.tneaonline.org

🙏

24/06/2023

TNOU-ல் தொலைநிலை, இணையவழியில் எம்பிஏ படிப்புக்கு அனுமதி






எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்தலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை ஏற்று, கடந்த மே 20-ம் தேதி இணைய வழியில் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கூட்டமைப்பு வசதிகளை ஏஐசிடிஇ ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் மூலம் அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக கருதி, எம்பிஏ படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்துவதற்கு 2023-24 முதல் 2027-28 வரை 5 ஆண்டு காலத்துக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

22/06/2023

July 3, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்.



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30-ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.07 லட்சம் பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.

2023–24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே 8-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 2.46 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, மாணவர் சேர்க்கை மே 29-ம்தேதி தொடங்கியது.

முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடந்தது. இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 31 ஆயிரத்து 488 இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த உடன், ஜூன் 22-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், கல்லுாரி திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அரசு ஆணை வெளியீடு.

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அரசு அறிவிப்பு.


2023- 24ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இவர்களுக்கு ஊதியம் வழங்க, ரூ.125 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து , அரசுக் கல்லூரிகளாக 41 கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டன.இந்த 41 கல்லூரிகளையும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 108 அனைத்து அரசு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 149 கல்லூரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து, 2023-24-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி-1-ல் 5699 (2423 + 41895 + 41381) கவுரவ விரிவுரையாளர்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற்காலிகமாக பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம் 11 மாதங்களுக்கு ஏப்ரல் 2023 மற்றும் ஜூன் 2023 முதல் மார்ச் 2024 வரை ரூ.125,37,80,000/- (நூற்று இருபத்தைந்து கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

i) கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ii) தொகுப்பூதிய அடிப்படையில் 11 மாதம் வீதம் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப்பணியிடம் உருவாகும் பட்சத்தில் அப்பணியிடத்தினை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பப்பட வேண்டும்.

iii) அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அதன் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட
வேண்டும்.

iv) ஆசிரியர் - மாணாக்கர்கள் விகிதாச்சாரம் 1 : 30 என்ற விகிதாச் சாரத்தின்படி அமைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 



அரசுப் பள்ளிக்கு புது வரவு--- தமிழ்க்கூடல் நிகழ்ச்சி !

 


சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.

இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

20/06/2023

ஜூன் 22, 23-ல் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு

 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் இணையவழியில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் இருக்கின்றன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டு (2023-24) சேர்க்கைக்கு 21,362 பேர் விண்ணப்பித்தனர். இவற்றில் தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் இணையவழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளையுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.

தொடர்ந்து கலந்தாய்வு இணைய வழியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். 20-ல் சேர்க்கைக் கடிதம்: சேர்க்கை இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்குக் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூன் 26-ம் தேதி வழங்கப்படும். அதைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துவிட வேண்டும்.

சீர்மிகு சட்டப் பள்ளியில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துவிட்டன. தகுதியான மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை கடிதம் வழங்கப்படும். பின்பு மாணவர்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். கூடுதல் விவரங்களை    http://tndalu.ac.in/என்ற இணையதளம் வாயிலாக அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


கூடுதல் விவரங்களுக்கு 

👇

http://tndalu.ac.in/


✳️

🙏

B.E/B.Tech கலந்தாய்வுக்கு ஜூன் 26-ம் தேதி தரிவரிசை பட்டியல் வெளியீடு.

 


B.E/B.Tech கலந்தாய்வுக்கு ஜூன் 26-ம் தேதி தரிவரிசை பட்டியல் வெளியீடு.

✳️✳️✳️✳️✳️✳️

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ல் தொடங்கி ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் சமர்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை துறை சார்ந்த அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.

தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பின் கலந்தாய்வு ஜூலை 2-ல் தொடங்கி நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

✴️✴️✴️


🙏

19/06/2023

நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் 650 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு

 


நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சத்து 38,596 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.4 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நாடு முழுவதும் 11.46 லட்சம் பேரும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் உட்பட 78,693 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளைவிட மதிப்பெண் விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 700 முதல் 720 வரை 31 பேரும், 650 முதல் 699 வரை 355 பேரும், 600 முதல் 649 வரை 1,133 பேரும், 500 முதல் 599 வரை 4,882 பேரும், 400 முதல் 499 வரை 7,833 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால், நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 12,997 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். 600 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர் பெற்றுள்ளனர். மேலும், 501 முதல் 600 வரை 23 பேரும், 401 முதல் 500 வரை 127 பேரும், 301 முதல் 400 வரை 437 பேரும், 201 முதல் 300 வரை 651 பேரும், 107 முதல் 200 வரை 2,741 மாணவர்களும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், 2018-ல் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர், 2019-ல் 6 பேருக்கு மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. பின்னர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத தனி உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

அதன்படி, 2020-ல் 435 பேர், 2021-ல் 540 பேர், 2022-ல் 567 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்தாண்டு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், இடஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வாயிலாக 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

18/06/2023

அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வணிகவியல் பாடங்கள் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிக்கை-வெளியீடு.



 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 22.06.2023 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையின் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் கல்வித் துறையின் தொலைபேசி எண்:


044-22351018, 22351014, 22351015 Extn. 356, 358

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி: பள்ளி கல்வித் துறை தகவல்

 


நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 11 லட்சத்து 45,976 (56.21%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 78,693 (54.45%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுதவிர தமிழக மாணவர் ஜே.பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

நடப்பாண்டு நீட் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட 4 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு 14,979 மாணவர்கள் நீட் தேர்வெழுதியதில் 4,118 (27%) பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாவட்ட அளவிலான தேர்ச்சியில் அதிகபட்சமாக சேலத்தில் 519 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் 235 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசியில் 335 பேர் தேர்வில் பங்கேற்றதில் வெறும் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அனுபவங்களில் அடிப்படையில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.



B.Sc Nursing,B.Pharam போன்ற படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு 19-6-2023 துவங்கி 28-6-2023 முடிகிறது.

 




2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses)  அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன.


தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம்

செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்ளை அணுகவும்.


கடைசி நாள்:28-6-2013 ,5 p.m

👇

www.tnhealth.tn.gov.in 

✳️✳️

 www.tnmedicalselection.org

✴️✴️

🙏


12 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு - கணிதம், இயற்பியல் பாடத்தை நீக்க உத்தரவு

 சென்னை: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.👎


இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துஅரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனுார், கூடலுார், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கிலவழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றி கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்: இதற்கிடையே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கணிதம் உள்ளிட்ட படிப்புகளை நிறுத்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர் சேர்க்கை குறைவு என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும்வைத்துக் கொண்டு கணிதம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை நிறுத்து வது அதிர்ச்சி அளிக்கிறது.

கணிதம் பட்டப்படிப்பையும் தொடர்ந்து நடத்திக் கொண்டே, புதிய பட்டப்படிப்புகளையும் தொடங்கி நடத்துவதற்கு அரசு கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். மாணவர்கள் குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத் தக் கூடாது.

கணிதப் படிப்பை புறக்கணிப்பது வரும் காலங்களில் உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு கணிதம்தான் அடிப்படை. எனவே, கணிதம் கற்றலை இனிமையாக மாற்றுதல், கணிதம் படிப்பவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கணிதம் படிப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



👎👎👎👎

🔰🔰🔰

✳️✳️

✴️






17/06/2023

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்வழி தேர்வுக்கு பயிற்சி

 

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்வழி தேர்வுக்கு பயிற்சி.


சென்னை: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 27 வயதுக்கு உட்பட்ட தேர்வர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப்பணித் தேர்வுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையில் தமிழ்வழிப் பயிற்சிக்கான சேர்க்கை வரும் ஜூன் 20-ல் நடக்கிறது.

இந்தியக் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான 11 மாத கால பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படும். வாரந்தோறும் மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப்புகளும் வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் சந்திப்பும் இப்பயிற்சியில் அடங்கும்.

10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், அகாடமி நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்தியக் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் சாதிச் சான்றிதழ் நகலையும் இணைத்து அகாடமிக்கு 2165, எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக வருகின்ற ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail  id👉 aarvamiasacademy@gmail.com

🙏.



16/06/2023

தமிழ்நாடு வேளாண் பல்கலை. இளம் அறிவியல் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் கடைசி வாரத்தில் கலந்ததாய்வு

 


சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பத்திருந்த முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதல் இடத்தையும், மதுரையைச் சேர்ந்த மாணவர் பி.ஸ்ரீராம் இரண்டாவது இடத்தையும், தென்காசியைச் சேர்ந்த மாணவி எஸ்.முத்துலெட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: 2023-2024ம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொதுவான இணையதள விண்ணப்பம் மூலம் இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை. இளம் அறிவியல் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் கடைசி வாரத்தில் கலந்ததாய்வு

🔰🔰🔰🔰🔰

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த கல்வியாண்டில் 5361 இடங்களை (உறுப்புக் கல்லூரிகளுக்கு -2555 + இணைப்பு கல்லூரிகளுக்கு – 2806) நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக 10.05.2023 முதல் 09.06.2023 வரை பெறப்பட்டு வந்தன.

இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுள் 36,612 பேர் தரவரிசைக்கு தகுதியானவர்களாக கருதப்பட்டனர். அவர்களுள் பெண் விண்ணப்பித்தாரர்களின் எண்ணிக்கை (21,384), ஆண் விண்ணப்பித்தாரர்களின் எண்ணிக்கை (12,333). ஆண் பெண் விகிதம் 580 : 1000.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான (7.5%) இடஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசாங்கப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் EMIS எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வியாண்டில் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 403 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்.

தமிழ்வழியில் இளம் அறிவியல் (மேதமை) வேளாண்மை (50 இடங்கள்) மற்றும் இளம் அறிவியல் (மேதமை) தோட்டக்கலை (50 இடங்கள்) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ்வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீட்டில் 20 இடங்களுக்கு 309 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்று திறனாளி மாணவர்களுக்கு மொத்தம் 5% இடங்கள் ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களில் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தொழில்முறைக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதல் இடத்தையும், மதுரையைச் சேர்ந்த மாணவர் பி.ஸ்ரீராம் இரண்டாவது இடத்தையும், தென்காசியைச் சேர்ந்த மாணவி எஸ்.முத்துலெட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர், மாற்று திறனாளிகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இடஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 2023 மூன்றாவது வாரத்தில் இருந்து தொடங்கப்படும் மற்றும் தகுதியானவர்கள் ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். இணையவழி கலந்தாய்வு மற்றும் பொது இடஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 2023 முதல் வாரத்திலிருந்து தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here ---> Provisional Rank list


💢💢💢💢💢

🙏



நெல்லை சுந்தரனார் பல்கலை.யில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு அறிமுகம்

 சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு- அறிமுகம்.


திருநெல்வேலி: இந்தியாவில் முதல்முறையாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் 54-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த கல்விசார் நிலைக்குழுவை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தை தொடங்கி வைத்து துணைவேந்தர் பேசினார். பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் மேற்கொள்ள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் புதிய துறைகள், பாடத்திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கூறியதாவது:

பல்கலைக்கழகத்தின்கீழ் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் செயல்படும் கடல்சார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தனியார் துறை பங்களிப்புடன் ரூ.600 கோடியில் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் முதலீட்டில் கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த பூங்காவில் 50 பொருட்களை விஞ்ஞானிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


13/06/2023

NEET Result 2023 (Link Activated)

 

NEET UG Result 2023 Declared


NTA has released the NEET UG 2023 result on the official website at neet.nta.nic.in.


Click Here for download Score card
👇




👆

All the Best

🙏



10/06/2023

மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் ‘NExT - நெக்ஸ்ட்’ தேர்வு

 


எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது.

தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) சட்டத்தின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான உரிமத் தேர்வாகவும் இருக்கும்.

மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் ‘‘நெக்ஸ்ட்’’ இருக்கும்.


🔰🔰🔰

🩺🩺

🩹

🔬🔬

🧬🧬🧬

💉💉💉💉

🩸🩸🩸🩸🩸

பிளஸ் 2 துணைத் தேர்வு: தனித் தேர்வர்கள் ஜூன் 14 ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


 

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் 14ம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click Here

👇

Time Table


👇

www.dge.tn.gov.in

Download the Hall Ticket

👆


All the Best

🔰🔰🔰🔰🔰

✳️✳️✳️✳️

✴️✴️✴️

🙏


கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கீடு. கடைசி நாள் :30-6-2023

 


கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கீடு.



சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன.

இதில், உணவு தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பிவிஎஸ்சி - ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் மற்றும் நிதிஆதரவு பெற்றோர், வெளிநாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள், மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

7.5% உள் இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க

👇


🐬🦈

🐳🐟🐠🐙

https://adm.tanuvas.ac.in

🐂🐃🐄🐘🦒🐪

🐕🐏🐈🐓

🦮🐕‍🦺

👆


✴️✴️✴️✴️✴️


🙏

09/06/2023

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

 


சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.150: இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட் டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை.

விருப்பமுள்ளவர்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப் படும்.


விண்ணப்பிக்க

👇

https://www.tnpoly.in/

👆

🙏