தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாறு, தமிழ் துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு.
சென்னை: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் கூடிய ஒராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் கூடிய ஒராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் நோக்கம் ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவணக் காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்துக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக் கொணர்வதற்கும் உதவுவதாகும்.
விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவம் ஆகியவற்றை www.tnarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்துக்கு 2023 ஜூன் 30ம் தேதி, மாலை 5 மணிக்குள் வந்துசேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✴️✴️✴️✴️✴️
More info and Application From
Click Here
👇
👆
🙏
No comments:
Post a Comment