Search This Blog

09/06/2023

மியூசிக் அகாடமியில் 3 ஆண்டு இசைப் பயிற்சி: ஜூலையில் தொடங்குகிறது.Last Date: 30-6-2023

 மியூசிக் அகாடமியின் மூன்றாண்டு டிப்ளமா மேம்பட்ட இசைப் பயிற்சி (வாய்ப்பாட்டு) வகுப்புகள், ஜூலை முதல் தொடங்க இருக்கின்றன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மியூசிக் அகாடமியின் மூன்றாண்டு மேம்பட்ட இசைப் பயிற்சி வகுப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு வெற்றி பெற்றவராகவும் 18-லிருந்து 30-வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். கர்னாடக இசையில் வர்ணம், க்ருதி பாடத் தெரிந்திருக்க வேண்டும். ஓரளவுக்கு மனோதர்மத்தில் பயிற்சி இருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சி வகுப்புகள், ஜூலை முதல் நவம்பர் மற்றும் ஜனவரி முதல் ஜூன் என இரு பருவங்களாக நடைபெறும். திங்கள் முதல் வெள்ளி வரை (வாரத்துக்கு 5 நாள்கள்) காலை 8 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மியூசிக் அகாடமி வளாகத்தில் நடக்கும். மாணவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தை மியூசிக் அகாடமியின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: இணைய தளம் www.musicacademymadras.in. தொடர்புக்கு: 044-28112231/ 28116902/ 28115162.

Last date for receiving application 30th June 2023.


Download Application Form

👇

www.musicacademymadras.in


👆

🙏


No comments:

Post a Comment