Search This Blog

09/06/2023

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை, ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு.

 


சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முதுகலை, ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை (M.A. Tamil), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) ஆகியன வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-24-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கைநடைபெறவுள்ளது. விண்ணப்பங்களை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 15 பேருக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கென தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும்மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகல், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றுடன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க

👇

www.tamiluniversity.ac.in

👆

No comments:

Post a Comment