Search This Blog

10/06/2023

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கீடு. கடைசி நாள் :30-6-2023

 


கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கீடு.



சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன.

இதில், உணவு தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இந்நிலையில், பிவிஎஸ்சி - ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் மற்றும் நிதிஆதரவு பெற்றோர், வெளிநாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள், மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

7.5% உள் இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க

👇


🐬🦈

🐳🐟🐠🐙

https://adm.tanuvas.ac.in

🐂🐃🐄🐘🦒🐪

🐕🐏🐈🐓

🦮🐕‍🦺

👆


✴️✴️✴️✴️✴️


🙏

No comments:

Post a Comment