Search This Blog

Showing posts with label Paramedical. Show all posts
Showing posts with label Paramedical. Show all posts

24/05/2024

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 2024 ஜூன் 21,5மணி

 



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 23/5/2014 நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கள் நியூட்ரிசீயன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. 


இந்நிலையில், அந்த இடங்களுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நேற்று (23-ம் தேதி) தொடங்கியது. அதன்படி, மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் கூறுகையில், ‘இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.

விண்ணப்பிக்க

👇

www.tnhealth.tn.gov.in


&

www.tnmedicalselection.org


🔬🩺💉🩸🧬💊

🏥👩‍⚕️

🎓


🙏





28/06/2023

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.



பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும்மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த இடங்களுக்கு 2023 -24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூன் 28-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.

இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுவிண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ)நீட்டித்துள்ளது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளங்களை பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ்முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

18/06/2023

B.Sc Nursing,B.Pharam போன்ற படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு 19-6-2023 துவங்கி 28-6-2023 முடிகிறது.

 




2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Paramedical Degree Courses)  அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன.


தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம்

செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்ளை அணுகவும்.


கடைசி நாள்:28-6-2013 ,5 p.m

👇

www.tnhealth.tn.gov.in 

✳️✳️

 www.tnmedicalselection.org

✴️✴️

🙏


14/08/2022

பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17ம் தேதி வரை நீட்டிப்பு

 சென்னை: மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்து மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட 19 வகையான மருத்துவப்படிப்புகள் உள்ளன. இதில், அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 536 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இந்நிலையில் விண்ணப்பபதிவு செய்வதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க மருத்துவ கல்வி இயக்ககம் அவகாசம் வழங்கி உள்ளது.