சென்னை: மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்து மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட 19 வகையான மருத்துவப்படிப்புகள் உள்ளன. இதில், அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 536 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இந்நிலையில் விண்ணப்பபதிவு செய்வதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க மருத்துவ கல்வி இயக்ககம் அவகாசம் வழங்கி உள்ளது.
No comments:
Post a Comment