Search This Blog

26/08/2022

6 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Vidyarthi Vigyan Manthan. விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 30

6 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Vidyarthi Vigyan Manthan. விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 30






Vidyarthi Vigyan Manthan (VVM) is an initiative of Vijnana Bharati (VIBHA), in collaboration with Vigyan Prasar, an autonomous organization under the Department of Science and Technology, Government of India and National Council of Educational Research and Training (NCERT), an institution under the Ministry of Education (earlier known as Ministry of Human Resources and Development). VVM is a national program for popularizing science among school students of standard VI to XI, conceptualised to identify bright minds with a scientific aptitude from the student community.














       













இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகின்றன.

அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்ப்பதோடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாம் பயின்றுவரும் பள்ளியில் இருந்தோ அல்லது வீட்டில் இருந்தவாறோ இத்தேர்வை இணைய வழியில் எழுதலாம். வரும் நவம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.


ஸ்மார்ட்போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி ஆகியவை மூலம் இத்தேர்வு நடைபெற உள்ளது. ஆங்கிலம் தவிர தமிழ், மராத்தி, தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் தேர்வு எழுதலாம்.


இதுகுறித்து 'வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்' மாநில ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் கூறியதாவது:


6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11-ம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.


பள்ளி மாணவர்களின் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு,சர்.சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, இந்தியாவின் சுதந்திர போராட்டம், ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீதகேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்றதலைப்பில் 10 சதவீத கேள்விகளும் என, மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.


மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள், ரொக்கப்பரிசு வழங்கப்படும்.


தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கு மாதந்தோறும் ரூ.2,000 'பாஸ்கரா' உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு கண்ணபிரான் தெரிவித்தார்.


மேலும் விவரங்களுக்கு அலைபேசி எண்: 8778201926, மின்னஞ்சல் முகவரி: vvmtamilnadu@gmail.com


www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்,30.

No comments:

Post a Comment