Search This Blog

29/09/2022

SSC க்கு தமிழக அரசு வழங்கும் ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்பு.

✴️✴️✴️✴️✴️✴️

     வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்  08.10.2022 ஆகும். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியாக, இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த இணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன் பெற உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது. கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் tamilnaducareerservices என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


🙏


27/09/2022

Recruitment of Probationary officers SBI.. Last Date 27/10/2022







✴️✴️✴️✴️✴️✴️


 

💢💢💢💢💢💢

📣📣📣📣📣

Apply online 👉 Click Here


✅✅✅✅

🙏

11 Std, Maths, English Medium, Handwritten Notes -Complete, By S. Rajan Sir, Salem.



 11 Std

Maths

English Medium

Handwritten

Complete Notes 

 By

 S. Rajan Sir, Salem. 

✅✅✅✅✅✅

👇

🖱

👉Click Here👈

👆

🔰🔰🔰🔰🔰🔰


🙏

26/09/2022

Fit India Quiz 2022(National Sports Quiz) - Register Now- Last Date: 15/10/2022




 The Fit India Quiz is a nation-wide quiz on fitness and sports for school children. The quiz will have representations from every State/UT in the country and will be a mix of online and broadcast rounds. It will have a Preliminary round, State level round and National Round.

NTA will be conducting the Preliminary Round of the Fit India Quiz 2022

Applications can be submitted by schools, online only, at https://fitindia.nta.ac.in



Submission of online 
applications 👉From 03.09.2022 to 15.10.2022

For more details
👇


🙏

24/09/2022

B.Ed. படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் . Last Date :3-10-2022

 


B.Ed. படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

Last Date:  3-10-2022

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் B.Ed படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் 6-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே B.Ed மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு கட்டாயம் என்றும் இளைய தளம் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தனியார் கல்லூரியில் சேர அந்தந்த கல்லூரி இணையதளத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Details 👉 https://www.tngasaedu.in

🔰🔰🔰🔰🔰


இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நீட்டிப்பு.

 

ளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோக்கை இணையதளத்தில் கடந்த 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.


பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெறும் இந்த படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் ஆா்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனா். வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினருக்கு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபா் 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.




23/09/2022

TNTET-Paper-I தேர்வு 14.10.2022 தேதி முதல் 20.10.2022 வரை









 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியின் படி 10.09.2022 முதல் 15,09.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 ற்கான தேர்வு 03.09.2022 பத்திரிகைச் செய்தியின் படி நிருவாக காரணங்களினால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது தேர்வுகள் 14.10.2022 தேதி முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்பட உள்ளது.

🔰🔰🔰🔰🔰



🙏



22/09/2022

SBI-Scholarship Program 2022-Class 6 to 12,Last Date :15/10/2022

 SBI Asha Scholarship Program 2022 is a tremendous and literally commendable initiative by one of the prominent bank-associated partners called as SBI Foundation. It comes under the Corporate Social Responsibility (CSR)plan of the SBI foundation. This program as named “ASHA” is a Hindi word which precisely means ” Hope“.This scholarship program is a ray of hope for underprivileged students who are not able to pay their tuition fees at school because of the financial challenges faced by their parents. To be precise, the focal point of the SBI Asha Scholarship Program is to deliver financial aid to those laudable students who have scored an impressive percentage in their education and on the other hand belong to impoverished families.


According to this program, candidates studying in classes 6 to 12 can seek the chance to acquire a scholarship of Rupees 15,000 for a period of one year.


This scholarship program has many important features. Here we are trying to place all of them in the form of a table. Therefore, it will be convenient for the students applying for this scholarship to have a glimpse of the table and take note of the important information regarding the SBI Asha Scholarship Program 2022. The table is as follows:


Title of the Scholarship Program SBI Asha Scholarship Program 2022

Sponsorship Provider SBI Foundation

Mode of Application Online

Start Date of Application Currently Open

End Date for Application 15th of October,2022 ( Tentative)

For the Year 2022-2023

Grant Rs 15,000 for a Year

Official Website https://sbifoundation.in

Centre For Personnel Talent Management (DRDO-CEPTAM). No. Of vacancies 1901,கடைசி நாள்: 23/9/2022




DRODO ணியாளர் திறமை மேலாண்மை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Centre For Personnel Talent Management (DRDO-CEPTAM)

மொத்த காலியிடங்கள்: 1901

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Technical Assistant-B, Technician-A

கல்வித்தகுதி: ITI, Diploma, B.Sc Degree தேர்ச்சி பெற்றருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.1,12,4000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தே

ர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1WN93xU99d1Rq3H0Ctq-jM5Z80bS2oY-r/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.09.2022.


Notification 👉Click Here



Jobs in NABARD, Last date:10/10/2022


 

Applications are invited from eligible Indian citizens for the post of Development 

Assistant/ Development Assistant (Hindi) in National Bank for Agriculture and Rural Development (NABARD). Candidates can apply only ON-LINE on NABARD website www.nabard.org between 15 September 2022 and 10 October 2022. 

NABARD is an all India Apex Organization, wholly owned by Government of India and is equal opportunity employer.


🔰🔰🔰🔰🔰



🔰🔰🔰🔰🔰

🔰🔰🔰🔰🔰



Notification 👉 Click Here

Apply online 👉 Click Here



🔰🔰🔰



🙏





20/09/2022

மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 22.09.2022

 மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான   இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 22.09.2022



சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, 2022-23 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) சேருவதற்க்கு இணையதள விண்ணப்பம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதள அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 21.09.2022

இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 22.09.2022

இணையதள விண்ணப்பப் பதிவுற்கான கடைசி நாள்: 03.10.2022

இணையதள முகவரி :

1. www.tnhealth.tn.gov.in

2.www.tnmedical selection.org


SSC-Combined Graduate Level Examination, 2022 , Last Date: 8/10/2022

 Staff Selection Commission will hold Combined Graduate Level Examination, 2022 for filling up of various Group ‘B’ and Group ‘C’ posts in different Ministries/ Departments/ Organizations of Government of India and various Constitutional Bodies/ Statutory Bodies/ Tribunals, etc. 

Last Date: 8/10/2022






🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Notification
👇

✅✅✅✅✅✅✅✅✅✅✅

Apply online
👇

🖱🖱🖱


🙏

முயற்சி திருவினையாக்கும். 



16/09/2022

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 

மிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வழக்கத்தை விட இந்த வருடம் கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை கட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கியது.

இந்த நிலையில் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக (செப்டம்பர் 16ஆம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த செயல்பாடுகள் வருகின்ற 21ஆம் தேதி தொடங்கும். விண்ணப்ப பதிவு உட்பட மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் www.tngasapg.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


15/09/2022

TNPSC-Combined Statistical Subordinate Services Examination. Last Date :14/10/2022

 TNPSC-Combined Statistical Subordinate Services Examination.

 Last Date :14/10/2022

💢💢💢💢💢





💢💢💢💢💢

Notification👉Click Here

💢💢💢💢💢


Apply online 

👇

http://tnpscexams.in/

💢💢💢💢💢💢💢💢


All the Best


🙏

மேற்கண்ட TNPSC தேர்வில்

தேர்ச்சி அடைந்தேன் என்பதை

உங்களுடன் பகிர்வதில்

மகிழ்ச்சி 

அடைகிறேன். 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

TNPSC Combined Civil Services Examination-III (Group-III.A Services) (Service Code No. 005).Last Date :14/10/2022




TNPSC Combined Civil Services 

Examination-III (Group-III.A Services) (Service Code No. 005).

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰








Notification👉Click Here
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Apply online👉https://tnpscexams.in/


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

All the Best

🙏


10/09/2022

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பு. கடைசிநாள் : 26/9/2022

 


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யின் கீழ், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 408 இடங்கள் உள்ளன. உணவு, கோழியின, பால்வளத் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டு மாணவா் சோக்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.ஹெச்; பிடெக் படிப்புகளுக்கு மாணவா் சோக்கைக்கான விவரங்கள் பல்கலை. இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. மாணவா்கள் வரும் 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோா்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.


Online Application👉 https://adm.tanuvas.ac.in/



08/09/2022

பிஎஸ்சி, பிஎட் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியீடு.

 


பிஎஸ்சி, பிஎட் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கடந்த மே, ஜூனில் நடந்த தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது குறித்து விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. tnteu.ac.in என்ற இணையதளத்தில் செல்லவும்.

2. Latest updates என்பதை கிளிக் செய்யவும்.

3. அதில் TNTEU B.Sc Result 2019, TNTEU B.Ed Result 2019 என்றிருக்கும். அதனை கிளிக் செய்க.

4. உங்கள் தேர்வு எண்ணை உள்ளிடவும்.

5. Submit பட்டனை அழுத்தி தேர்வு முடிவுகளை பெறலாம்.


👇

tnteu.ac.in

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


06/09/2022

இன்று UG NEET - தேர்வு முடிவு.

NEET - தேர்வு முடிவு. 



 எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (செப்.7) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒஎப்ஆர் ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவு நாளை வர இருப்பதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நீட்' தேர்வு முடிவு நாளை வெளிவர இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


Result👉http://neet.nta.nic.in


03/09/2022

மாநில நல்லாசிரியர் விருது--டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - Selected 396 Teachers List ( All District)

 


சிரியா் தினத்தையொட்டி தமிழக அரசின் சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் 396 ஆசிரியா்களுக்கு 'டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படவுள்ளது.


மறைந்த குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியா்களை தோவு செய்து 'டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.


அதன்படி நிகழாண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களை தோவு செய்யும் பணிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவந்தன. மாவட்ட அளவிலான பரிந்துரைகளில் விருதுக்கு 396 ஆசிரியா்களை மாநில தோவுக்குழுவினா் இறுதி செய்துள்ளனா்.


அதன்படி அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 342 ஆசிரியா்கள், 38 தனியாா் பள்ளி ஆசிரியா்கள், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியா்கள், 2 சமூக பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியா்கள், 2 மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) 10 பேராசிரியா்கள் என மொத்தம் 396 போ விருதுக்கு தோவு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் (செப்டம்பா் 5) விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ராதாகிருஷ்ணன் விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும்.


விருது பெறும் 

தலைமை ஆசிரியர்/ஆசிரியர் பட்டியல்


👇

Click Here


🙏

விருது பெறும்

அனைத்து ஆசிரிய பெரு மக்களையும்

thiruvaimaths.blogspot.com

வாழ்த்து கிறது. 

TNTET-I. தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.


 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- I ற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-ற்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட இருப்பதாக கடந்த மாதம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவித்தது.


பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.


தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்- I ற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.