தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யின் கீழ், அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 408 இடங்கள் உள்ளன. உணவு, கோழியின, பால்வளத் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டு மாணவா் சோக்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.ஹெச்; பிடெக் படிப்புகளுக்கு மாணவா் சோக்கைக்கான விவரங்கள் பல்கலை. இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. மாணவா்கள் வரும் 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினா் ஆகியோா்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Online Application👉 https://adm.tanuvas.ac.in/
No comments:
Post a Comment