Search This Blog

03/09/2022

மாநில நல்லாசிரியர் விருது--டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - Selected 396 Teachers List ( All District)

 


சிரியா் தினத்தையொட்டி தமிழக அரசின் சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் 396 ஆசிரியா்களுக்கு 'டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படவுள்ளது.


மறைந்த குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியா்களை தோவு செய்து 'டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.


அதன்படி நிகழாண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களை தோவு செய்யும் பணிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவந்தன. மாவட்ட அளவிலான பரிந்துரைகளில் விருதுக்கு 396 ஆசிரியா்களை மாநில தோவுக்குழுவினா் இறுதி செய்துள்ளனா்.


அதன்படி அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 342 ஆசிரியா்கள், 38 தனியாா் பள்ளி ஆசிரியா்கள், 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியா்கள், 2 சமூக பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியா்கள், 2 மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) 10 பேராசிரியா்கள் என மொத்தம் 396 போ விருதுக்கு தோவு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் சென்னை கலைவாணா் அரங்கில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆசிரியா் தினவிழாவில் (செப்டம்பா் 5) விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ராதாகிருஷ்ணன் விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும்.


விருது பெறும் 

தலைமை ஆசிரியர்/ஆசிரியர் பட்டியல்


👇

Click Here


🙏

விருது பெறும்

அனைத்து ஆசிரிய பெரு மக்களையும்

thiruvaimaths.blogspot.com

வாழ்த்து கிறது. 

No comments:

Post a Comment