சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவி,,,,,,யல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai - 6' என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும்.
Apply online
👇
No comments:
Post a Comment