Search This Blog

Showing posts with label arts college. Show all posts
Showing posts with label arts college. Show all posts

20/05/2024

அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர விண்ணப்பிக்க அவகாசம் 24 மே வரை நீட்டிப்பு.



அரசு கல்லூரிகளில் இளநிலை அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு மே 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 



விண்ணப்பிக்க

👇

https://www.tngasa.in/user/login


🙏


அரசு கல்லூரிகளில் சேர்ந்து அரசின் உதவிகளை பெற்று வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள். 



🙏

🎯

🔰🔰🔰




05/05/2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - (UG-Courses) சேர்க்கை 2024-2025 : 6/5/2024 ல் தொடங்குகிறது.

 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - இளநிலைப் பட்டப்படிப்பு (Under Graduate Courses) சேர்க்கை 2024-2025 அறிவிப்பு வெளியானது. 




6-5-2024 அன்று இணைய வழியில் தொடங்குகிறது. 


மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க

👇

www.tngasa.in

👆



17/08/2023

ஆக.21 முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை .

 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக.21 முதல் நேரடி சேர்க்கை - மாணவர்களுக்கு அழைப்பு


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 9,820 காலியிடங்களை நிரப்புவதற்கான நேரடி சேர்க்கை ஆக. 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 11,300 இடங்கள் உள்ளன. இதில் சேர இந்தாண்டு 2.46 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு கடந்த மே 29-ல் தொடங்கி ஜூலை மாத இறுதி வரை நடைபெற்றது.

9,820 இடங்கள் காலி: அதன்மூலம் இளநிலை படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 416 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும் 9,820 இடங்கள் நிரம் பாமல் காலியாக உள்ளன. இவற்றை நேரடி சேர்க்கை மூலம் நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இணையதளத்தில் அறியலாம்: ‘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 முதல் நடத்தப்பட உள்ளது. நிரம்பாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு 

👇

www.tngasa.in

🔰🔰🔰🔰


🙏






05/05/2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். Last Date:19-5-2023

 



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில்‌ உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளது. இதற்கு மாணவர்கள் https://tngasa.org/ மற்றும்  https://tngasa.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டண விவரம்‌


ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்‌:


விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ.48/- 
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- 


எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் ‌கட்டணம்‌ எதுவும் இல்லை
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- மட்டும்‌ 


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking  மூலம்‌ இணையதள வாயிலாகச் செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ மே 8 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகச் செலுத்தலாம்‌.


இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ துவங்கும்‌ நாள்‌ - 08.08.2023


இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்‌ - 19.06.2023


கூடுதல் தகவல்களுக்கு: தொடர்பு எண்‌ : 1800 426 0110

🔰🔰🔰🔰🔰

விண்ணப்பிக்க

👇


✅✅✅✅✅


📡⚖️🧬🔭🔬🛰🚀

👆

🙏


get app pic 




21/06/2022

Govt Arts and Science collge- ல் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்:7/7/2022

சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவி,,,,,,யல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் வருகிற ஜூலை 7ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai - 6' என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும்.

Apply online

👇


www.tngasa.in


www.tngasa.org

30/09/2021

முதலாம் ஆண்டு ARTS AND SCIENCE மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் : கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

 


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்  : கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு


கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.  

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கு முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கியது.

அந்தவகையில், கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தகுதியுள்ள (18 வயதுக்கு மேற்பட்ட) மாணவர்கள் அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி  செலுத்துக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி வளாகங்களில் முகக் கவசம்  கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை  தவறாது பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த  வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


''அக்டோபர்  4ம் தேதி முதல் நேரடி வகுப்பில் பங்கேற்க கல்லூரி வாசல் செல்லும் மாணவர்களே உங்களை நம்பி தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து தன் பட்டறிவுடன் தேசிய, சர்வதேச அறிவையும் வளர்த்து மேலான நிலையை அடைந்து உங்கள் வீட்டிற்கும்,ஊருக்கும்,நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்'' என ஒரு ஆசிரியனாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்