Search This Blog

30/09/2021

முதலாம் ஆண்டு ARTS AND SCIENCE மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் : கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

 


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்  : கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு


கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.  

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கு முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கியது.

அந்தவகையில், கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தகுதியுள்ள (18 வயதுக்கு மேற்பட்ட) மாணவர்கள் அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி  செலுத்துக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி வளாகங்களில் முகக் கவசம்  கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை  தவறாது பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த  வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


''அக்டோபர்  4ம் தேதி முதல் நேரடி வகுப்பில் பங்கேற்க கல்லூரி வாசல் செல்லும் மாணவர்களே உங்களை நம்பி தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து தன் பட்டறிவுடன் தேசிய, சர்வதேச அறிவையும் வளர்த்து மேலான நிலையை அடைந்து உங்கள் வீட்டிற்கும்,ஊருக்கும்,நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்'' என ஒரு ஆசிரியனாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments:

Post a Comment