Search This Blog

07/09/2021

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி

 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் கூடுதல் சேர்க்கைக்கு  அனுமதி


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்கை உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.


கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலைபாட பிரிவுகளில் 25 சதவிகித கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாட பிரிவுகளில் கல்லூரிகளில் உள்ள ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவிகித கூடுதல் இடங்களுக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் மனுமதி வழங்க வேண்டும் என உயர்கல்வித்துறை கூறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு கல்லூரி காலை நோக்கி மாணவர்கள் இந்த ஆண்டு படையெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் செயல்படும் 145 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவிகிதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமத்து அளித்து உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள 145 அரசு கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதி ஏற்படும். இந்த கூடுதல் மாணவர் சேர்க்கையானது ஏற்கனவே தமிழக அரசு பின்பற்றக்கூடிய 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை பின்பற்றவே வேண்டும் என உயர்கல்வித்த்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணையாக வெளியிட்டுள்ளார்.

🔰🔰🔰🔰🔰🔰🔰





No comments:

Post a Comment