கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டு முதல் வேளாண்மை, தோட்டக்கலை பட்டப் படிப்புகள் தமிழ் வழியிலும் பயிற்றுவிக்கப்பட உள்ளன. கோவை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், கோவை தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இந்த தமிழ் வழி படிப்புகள் நடத்தப்பட உள்ளன.
🌳🌴🌴🌵🌷🌸🌹🍃
No comments:
Post a Comment