04/09/2021

Happy Teachers Day

 🌸🌸🌸🌺🌺🌺🌻🌻🌻


🌻🌻🌻🌺🌺🌼🌸🌸


           இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு.

ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, மரியாதை, கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த ஆசிரியரை பெருமைப்படுத்துவதற்காகவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினம் வரலாறு :

தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசிரியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியரின் சிறப்புகள் :

ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை.

மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர் .

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.

மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.

ஆசிரியர் தின கொண்டாட்டம் :

ஆசிரியர் தினமானது நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. 

ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழக அரசின் “நல்லாசிரியர் விருது” வழங்கப்படுகிறது.

இப்படி மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களைப் போற்றி, நன்றி கூறவே ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

💢💢💢💢💢💢💢




டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு :

பிறப்பு:

வீ.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888-ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணியில் உள்ள சர்வபள்ளி என்னும் கிராமத்தில் வீராச்சாமிகும், சீதம்மாக்கும் மகனாக பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு.

கல்வி :

இவர் தன் இளமைக் காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியை, உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார்.

தனது தொடக்க கல்வியை திருவள்ளூரில்  உள்ள ‘கௌடி’ பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பதியிலுள்ள, ‘லூத்தரன் மிஷன்’ உயர்நிலை பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை வேலூரில் உள்ள ‘ஊரிஸ்’ கல்லூரியிலும் பயின்றார்.

பின் அங்கிருந்து சென்னையிலுள்ள கிறிஸ்துவர கல்லூரிக்கு மாறி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். முதன்மைப் பாடமாக தத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்தார்.

குடும்ப வாழ்க்கை:

டாக்டர் ராதா கிருஷ்ணன் தனது 16-வது வயதில் தனது தூரத்து உறவினர் மகளான சிவகாமி என்னும் பெண்ணை மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இவரது ஒரே மகன் சர்வபள்ளி கோபால். இவர் இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவராக உள்ளார்.

இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா மற்றும் சங்கரா ராமானுஜர்,மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும், சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி போன்றோர்களின் தத்துவங்களையும் கற்று தேர்ந்தார்.

மேலும் இவற்றையெல்லாம் நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தினார். இவற்றையெல்லாம் நம் நாட்டில் இருந்தே கற்றார் என்ற பெருமையும் இவரையே சாரும்.

பணிகள் மற்றும் பதவிகள்:

1962 முதல் 1967 வரை இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

1933 முதல் 1937 வரை ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

🙏

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰



No comments:

Post a Comment