Search This Blog

12/06/2022

பழைய பஸ் பாஸ் செல்லும் அமைச்சர் அறிவிப்பு.

 சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் தெரிவித்ததாவது: "பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். பள்ளி வாகனங்களுக்கு முன்னும் பின்னும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக இது கண்காணிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment