Search This Blog

16/06/2022

20 ஆம் தேதி 10,12 வகுப்பு Result

 



10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுதினர். 10ஆம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சத்து 55ஆயிரத்து 474 மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து, அவற்றை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.6.2022 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
காலை 9.30 மணிக்கு (12ஆம் வகுப்பு)

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in
நண்பகல் 12.00 மணிக்கு (10ஆம் வகுப்பு)

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centers) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment