Search This Blog

15/06/2022

திட்டமிட்டபடி 17ஆம் தேதி 10th ரிசல்ட்

 சென்னை: 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடைத்தாள்கள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.inwww.tnresults.nic.in-ல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதித்தது. தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்காமல் அடுத்த ஆண்டிற்கு நேரடியாக தகுதி பெற்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியும் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது. 

10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


No comments:

Post a Comment