Search This Blog

20/06/2022

எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வுக்கு நுழைவு சீட்டு வெளியீடு.

 



காவல் துறைக்கு, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, 444 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கு, வரும் 25ம் தேதி மாநிலம் முழுதும், 197 மையங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. காலை, 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பொது தேர்வும்; மதியம் 3:30 முதல் மாலை 5:10 மணி வரை, தமிழ் திறனறிதல் தேர்வும் நடக்க உள்ளது. போலீஸ் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தோருக்கு, ஜூன் 26ம் தேதி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான நுழைவு சீட்டு, சீருடை பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here 

👇

https://www.tnusrb.tn.gov.in/







No comments:

Post a Comment