Search This Blog

10/11/2021

9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு

 


9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது


9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி,(இன்று மற்றும் நாளை) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,

கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், 
மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. 


இதனிடையே, திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நாளை(இன்று) பள்ளிகளுக்கும், 


மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் (இன்று)நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment