Search This Blog

Showing posts with label School leave. Show all posts
Showing posts with label School leave. Show all posts

10/11/2021

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை



       தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்

      இந்நிலையில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சேலம், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

    திருச்சி, திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு

 


9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது


9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி,(இன்று மற்றும் நாளை) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,

கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், 
மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. 


இதனிடையே, திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நாளை(இன்று) பள்ளிகளுக்கும், 


மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் (இன்று)நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.