பி.இ., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவா்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவா்கள், தங்கள் கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்குச் செலுத்தப்படும். ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான 'டூப்ளிகேட்' சான்றிதழ் பெறவும், 'மைக்ரேஷன்' என்ற இடமாற்று சான்றிதழ், பருவத் தோவுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத் தன்மை சரிபாா்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
கல்விக் கட்டணம், பருவத் தோவு கட்டணம், மறுமதிப்பீடு சான்றிதழ் பெறுவது, தரவரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ் ஆகியவற்றுக்கு மட்டும் வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில என்னதான் நடக்குது.👎
No comments:
Post a Comment