Search This Blog

25/11/2021

இன்று (26/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

இன்று (26/11/2021)விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில்  எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று  பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்ற  தகவல் வெளியாகி உள்ளது.

நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

அதேவேளை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு
 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🙏

(உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்)




No comments:

Post a Comment