Search This Blog

15/11/2021

ஜைகோவ்-டி’ கோரானா தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்



    12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்காக, ‘ஜைகோவ்-டி’ தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில், இப்போதைக்கு 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மட்டுமே இம்மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களுக்கு செலுத்தப்பட்ட பிறகு, நிபுணர்கள் கருத்தை பெற்று, சிறுவர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மருந்தை தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்ப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஒரு கோடி தடுப்பு மருந்துகள் வாங்க ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது. இது, ஊசியின்றி செலுத்தும் மருந்தாகும். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த ‘ஜைடஸ் கடிலா’ நிறுவனம் இதை தயாரித்துள்ளது.

No comments:

Post a Comment