Volume 1 and Chapter-12
Tamil medium-->Click here
English medium-->Click here
🔰🔰🔰🔰
The National Institute of Open Schooling (NIOS), functioning under the Union Education Ministry, is set to expand its offerings by introducing Tamil medium education for Plus-2 courses and launching new subjects focused on vocational skills and sports.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு 2023 பிப்ரவரியில் நடத்தப்பட்டது. 2023, 2024-ம் ஆண்டுகளுக்கான டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள் டெட் முதல் தாள் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் 2-ம் தாள் தேர்வுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். நவம்பர் 15, 16-ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (செப்.8) நிறைவடைகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களும்
என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்பவர்களும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், முதல் குடியரசுத் துணைத் தலைவரும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், நாடு முழுவதும் அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் அளவுக்கு முன்னுதாரணர்.
திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் 1888 செப்டம்பர் 5இல் பிறந்தார் ராதாகிருஷ்ணன். ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூர், திருத்தணியில் படித்தார். தொடர்ந்து திருப்பதி லுத்தரன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் உயர்கல்வியை முடித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் தத்துவவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து, படித்தார்.
உயர் கல்வியை முடித்த பிறகு சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளர் பணி அவருக்குக் கிடைத்தது. பிறகு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகவும், பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். தொடக்க நாட்களி லிருந்தே தனது மாணவர்களிடையே மிகவும் பிரபலமானவராக ராதாகிருஷ்ணன் விளங்கினார்.
அந்த அளவுக்கு மாணவர் களோடு நெருக்கமாக இருந்தார். 30 வயதுக்குள்ளாகவே பேராசிரியர் பணியை அவர் அடைந்தது இன்னொரு சிறப்பு. அவர் எழுதிய ‘இந்திய தத்துவம்’ என்கிற நூல் மூலம் பல வெளிநாடுகளில் சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
முதலில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் (1931-36), பிறகு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (1939), 1946இல் யுனெஸ்கோவின் தூதர் என ராதாகிருஷ்ணன் சேவையாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு 1948இல் பல்கலைக் கழகக் கல்வி ஆணைய தலைவராக உயர்ந்து, பல பரிந்துரைகளை வழங் கினார். அவை உயர்கல்விக்கான சிறந்த கல்வித் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தன. சிறந்த கல்வியாளராக விளங்கிய அவர், நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக 1952இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகு 1962இல் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்தார்.
ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவரான பிறகு அவருடைய நண்பர்களும், மாணவர்களும் அவரின் பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். அப்போது, ராதாகிருஷ்ணன், ’என் பிறந்த நாளைத் தனித்தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாகக் கடைப் பிடித்தால் அது எனக்குப் பெருமை யாக இருக்கும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது முதலே இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை வெறுமனே பெயரளவில் கொண்டாடாமல், கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரில் நல்லா சிரியர் விருதுகள் வழங்கி, மத்திய, மாநில அரசுகள் கௌரவிப்பது, ஆசிரியர் பணிக்கு மட்டுமல்ல, டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் செய்து வருகிற மரியாதை ஆகும்.
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இந்தத் தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
இந்த ‘கேட்’ நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப் பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2026-ம் ஆண்டுக்கான ‘கேட்’ தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெவுள்ளது. இந்த முறை ‘கேட்’ தேர்வை கவுகாத்தி ஐஐடி நடத்த உள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் https://gate2026.iitg.ac.in/ எனும் வலைதளத்தில் சென்று செப்டம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் மார்ச் 19-ல் வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைசி நாள்: 4-9-2025
🔰🔰🔰
தமிழகத்தில் பள்ளி +1 மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ) மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுத தகுதிவுடையவர்கள்.
👇
👆
என்ற இணைய தளம் மூலம் இன்று முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். செப்டம்பர் 4ம் தேதி கடைசி நாள் ஆகும்.
💢💢💢💢💢
Press Release
👇
விண்ணப்படிவம்
👇
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று (ஆக. 11) முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள்
என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப். 1-ம் தேதி தொடங்கும்.
🙏🏼
இந்த ஆண்டுக்கான ‘டெட்’ தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை திடீரென அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவும் உடனடியாக தொடங்கியது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றக் கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1-ம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2-ம் நடத்தப்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடைசியாக 2022-ம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டு காலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போது பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பணியில் உள்ள ஆசிரியர்களும், அரசு பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில, டெட் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென இன்று மாலை வெளியிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேசித்து அதற்கான அறிவிப்பை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டெட் தேர்வுக்கான கல்வித்தகுதி மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Revised Exam Dates press release
👇
🙏🏼
தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், செல்போன் பயன்படுத்துவதன் மூலமாக இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது, அவருக்கு கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.
எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.
🙏🏼
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் 4-8-2025 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சிக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 9499055642, 9499055618 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
🙏
Chennai: From warm-ups to winning medals, Physical Education (PE) in Tamil Nadu schools is getting a major upgrade. For the first time, students of Classes 6 to 10 in govt and aided schools will now have exclusive guide books for PE - making the subject as structured and serious as maths or science.
Released by the school education department, the new physical education guidebooks feature colourful and clear, step-by-step illustrations to help students easily understand exercises, games, and safety techniques. From yoga postures and warm-ups to Tamil heritage games and first aid, each activity is visually explained to support correct form and better engagement. Additionally, it encourages collaboration with special educators to teach children with special needs.According to officials from department, the larger goal is to help students from all walks of life excel in state, national, and international sports competitions, win medals and enhance mental well being. This structured guidebook brings clarity and consistency to how the subject is taught. "For students, it helps develop fitness, coordination, and lifelong healthy habits through age-appropriate, engaging activities.தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
இதற்கான சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
🙏
In a major initiative to promote green energy education, eight government polytechnic colleges in the southern districts have introduced a new ‘Diploma in Renewable Energy’ programme for the 2025-26 academic year. The course is being offered under a collaboration between the Government of Tamil Nadu and Tata Power Renewable Energy.
The programme follows the ‘Earn While You Learn’ model, enabling students to receive monthly stipends ranging from Rs 4,000 to Rs 10,000 throughout their course period.
As part of the curriculum, students will undergo three months of classroom training at their respective polytechnic colleges-including those in Madurai, Thoothukudi, Tirunelveli, Nagercoil, Usilampatti, Andipatti, and Chekkanurani-with a stipend of Rs 4,000 per month. The remaining nine months will be spent at TP Solar Limited in Tirunelveli, where they will gain industrial exposure and receive Rs 8,000 per month.
Speaking to TNIE, G Vijayakumari, Principal of the Government Women’s Polytechnic College, Madurai, said, “Each polytechnic college has an intake of 30 seats. In Madurai, 38 students have already been admitted, with preference given to female candidates. Students will get hands-on learning on par with other engineering streams, including training in solar panel manufacturing, maintenance, and energy efficiency. This opens direct job opportunities at TP Solar after graduation without any service bond.”
Andipatti Government Polytechnic College principal (i/c) M Poonguzhali added that classes began on July 7, and some seats are still available in certain colleges. “Students who have completed Class XII can apply. Hostel and food facilities are provided free of cost during industrial training. The stipend will increase progressively- Rs 8,000 in the first year, Rs 9,000 in the second year, and Rs 10,000 in the final year,” she said.
In addition, eligible students can avail Rs 1,000 monthly assistance under Pudhumaipen or Tamil Pudhalvan schemes. The course fee has been fixed at a nominal Rs 2,500 per year.
Subject Areas with weightage: | (approximate number of questions) |
---|---|
English Language | 22-26 questions, or roughly 20% of the paper |
Current Affairs, including General Knowledge | 28-32 questions, or roughly 25% of the paper |
Legal Reasoning | 28-32 questions, or roughly 25% of the paper |
Logical Reasoning | 22-26 questions, or roughly 20% of the paper |
Quantitative Techniques | 10-14 questions, or roughly 10% of the paper |
📢📢📢📢📢📢📢
The UG-CLAT 2025 would focus on evaluating the comprehension and reasoning skills and abilities of candidates. Overall, it is designed to be a test of aptitude and skills that are necessary for a legal education rather than prior knowledge, though prior knowledge occasionally may be useful to respond to questions in the Current Affairs including General Knowledge section.
The UG-CLAT 2025 shall be a 2-hour test, with 120 multiple-choice questions carrying 1 mark each. There shall be negative marking of 0.25 marks for every wrong answer. These questions would be divided across the following 5 subjects:
In this section of the UG-CLAT 2025, you will be provided passages of about 450 words each. These passages will be derived from contemporary or historically significant fiction and non-fiction writing, and would be of a standard that a 12th standard student may be able to read in about 5-7 minutes.
Each passage will be followed by a series of questions that will require you to demonstrate your comprehension and language skills, including your abilities to:
In this section, you will be provided passages of up to 450 words each. The passages will be derived from news, journalistic sources and other non-fiction writing. The questions may include an examination of legal information or knowledge discussed in or related to the passage, but would not require any additional knowledge of the law beyond the passage.
Each passage will be followed by a series of questions that will require you to demonstrate your awareness of various aspects of current affairs and general knowledge, including:
In this section, you will be expected to read passages of around 450 words each. The passages may relate to fact situations or scenarios involving legal matters, public policy questions or moral philosophical enquiries. You will not require any prior knowledge of law to attempt the questions in this section. You will benefit from a general awareness of contemporary legal and moral issues to better apply general principles or propositions to the given fact scenarios.
Each passage would be followed by a series of questions that will require you to:
The Logical Reasoning section of the UG-CLAT 2025 will include a series of short passages of about 450 words each. Each passage will be followed by one or more questions that will require you to:
The Quantitative Techniques section of the UG-CLAT 2025 will include short sets of facts or propositions, or other textual representations of numerical information, followed by a series of questions. You will be required to derive information from the passages or questions, and apply mathematical operations on such information.
The questions will require you to:
The Consortium plans to publish various preparatory materials for the UG-CLAT 2025, including:
The Consortium will also provide candidates who have successfully completed their application to the UG-CLAT 2025 access to a learning platform where you may access the preparatory materials described above, as well as your scores on various exercises and model question papers. The Consortium shall also organise online sessions for such candidates, in which subject experts shall provide guidance on how best to prepare for each of the sections of the UG-CLAT 2025, and how candidates may approach the questions in each section.
In addition, you should develop your capacity to read and understand bodies of text, ensure you stay abreast of news and current affairs by regularly reading quality newspapers and periodicals, and improve your speed of answering questions on quantitative techniques by practising with materials such as 10th standard mathematics textbooks.
MORE INFO
👇
📢📢📢📢📢📢📢📢📢📢📢📢
https://consortiumofnlus.ac.in/
👆
ர்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டடுள்ளது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்,கோபாலசுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆக.13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்படு்ம்பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தேர்வு முறை மாற்றம்: மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்மைத்தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்நிலைத் தேர்வை பொருத்தவரையில் குரூப்-2,குரூப்-2 ஏ இரு தேர்வுகளுக்கும்பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்தகட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2ஏ பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 ஏ பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300. இது கணினிவழியில் நடத்தப்படும்.
முன்பு பொது அறிவு பகுதியில் பொதுதமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது புதிய தேர்வுமுறையில் அப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2 குருப் 2-ஏ இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் ஏமாற்றம்: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் காலியிடங்களாவது வரும என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் குரூப்-2 , குரூப்-2ஏ தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.