Showing posts with label ITI admission. Show all posts
Showing posts with label ITI admission. Show all posts

06/08/2025

ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு

 தமிழக அரசின் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை இயக்​குநர் விஷ்ணு சந்​திரன் 4-8-2025 அன்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை​யின்​கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 311 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்​கைக்​கான காலஅவ​காசம் ஜூலை 31 வரை வழங்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர்​களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.

தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். தமிழக அரசு வழங்​கும் விலை​யில்லா சைக்​கிள், சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் மற்​றும் பஸ் பாஸ் வழங்​கப்​படும். இந்த அரிய வாய்ப்பை பயன்​படுத்தி தாங்​கள் விரும்​பும் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களுக்கு கல்​விச் சான்​றிதழ்​களு​டன் நேரில் சென்று விரும்​பும் தொழிற்​பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்​ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்​பாக ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால் 9499055642, 9499055618 ஆகிய செல்​போன்​ எண்​களில்​ தொடர்​பு​கொள்​ள லாம்​.இவ்​​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

🙏

27/08/2024

அரசு ITI நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் 311 தனியார் ஐடிஐ-க்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்களுக்காக நாகர்கோவில், உளூந்தூர்பேட்டை, கிண்டி ஆகிய அரசு ஐடிஐ-க்களில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்காக பிரத்யேக ஃபிட்டர் தொழிற்பிரிவு இயங்கி வருகிறது. மேலும் அனைத்து அரசு ஐடிஐ-க்களிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


அனைத்து ஐடிஐ-க்களிலும் நடப்பு கல்வியாண்டுக்கான நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஐடிஐ-யில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். மேலும், தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள், சீருடை, ஷூ, வரைபடக் கருவிகள் உண்டு. அதோடு கட்டணமில்லா பேருந்து வசதியும் வழங்கப்படும்.

எனவே, காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாகர்கோவில், உளுந்தூர்பேட்டை கிண்டி தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று சேர்க்கை பெறலாம். சேர்க்கை நீட்டிப்பை மாற்றுத்திறனாளிகளும், அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி தாங்கள் சேர விரும்பும் அரசு ஐடிஐ-க்கு கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 9499055689 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔰🔰🔰


🙏


11/05/2024

அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்க கடைசி நாள்:7/6/2024

 


தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் அமுதவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன.



இவற்றில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 10 (இன்று) முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


🔰🔰🔰

🙏