Showing posts with label 12 result. Show all posts
Showing posts with label 12 result. Show all posts

06/08/2025

11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பள்ளிகளில் நாளை முதல் விநியோகம்

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே மாதம் வெளியாகின. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (ஆக.7) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

இதற்கான சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்மூலமும், தனித் தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களின் வாயிலாகவும் அசல் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


🙏


01/05/2024

TN +2, +1,10 Result அறிய.....





பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளை பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.


இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது.


தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.



முடிவுகள் அறிய. 


 👉https://www.tnresults.nic.in/



👉dge.tn.gov.in



(மே 6 ஆம் தேதி காலை 9.30 க்கு தான் செயல்படும்) 



All the Best

🎯


🔰🔰🔰🔰


🙏





26/04/2023

இன்று +2 Result .



+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8,காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. உறுதி மொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


தேர்வு முடிவு அறிய

Click Here

👇

www.tnresults.nic.in

💢💢💢💢💢

www.dge1.tn.nic.in

✅✅✅✅✅

www.dge2.tn.nic.in

✴️✴️✴️✴️✴️

www.dge.tn.gov.in


Dircet link

👇

http://www.tnresults.nic.in/tpexter.htm


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


🙏


All the Best