17/07/2025

APPLY TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION - II (GROUP II AND IIA SERVICES),LAST DATE : 13/8/2025

 

ர்- பதி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் 645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி வெளி​யிட்​டடுள்ளது. குரூப்-2 ஏ தேர்​வு​முறை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுஉள்​ளது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​,கோ​பாலசுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: டிஎன்​பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளபடி, சார்​-ப​தி​வாளர், இளநிலை வேலை​வாய்ப்பு அலு​வலர், வனவர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் 645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு ஜூலை 15-ம் தேதி (நேற்​று) வெளி​யிடப்​பட்​டது. இதற்​கான முதல்​நிலைத் தேர்வு செப். 28-ம் தேதி நடை​பெறும். தேர்​வுக்கு ஆக.13-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். தேர்​வுக் கட்​ட​ணத்தை யுபிஐ வசதி மூல​மாக செலுத்​தலாம். தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள காலிப்​பணி​யிடங்​களின் எண்​ணிக்கை தோராய​மானது ஆகும். அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களிட​மிருந்து கூடு​தல் காலிப்​பணி​யிடங்​கள் பெறப்​படு்ம்​பட்​சத்​தில் கலந்​தாய்​வுக்கு முன்​பாக மேலும் பணி​யிடங்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​படும்.

தேர்வு முறை மாற்றம்: மேலும், தேர்​வர்​களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்​மைத்​தேர்வு முறை மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

முதல்​நிலைத் தேர்வை பொருத்தவரை​யில் குரூப்-2,குரூப்-2 ஏ இரு தேர்வு​களுக்​கும்பொது​வான தேர்​வு​தான். பொது அறிவு மற்​றும் கணிதம் தொடர்​பான100 கேள்வி​கள், பொது தமிழ் அல்​லது பொது ஆங்​கிலம் பாடத்​தில் 100 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் இடம்​பெறும். ஒரு கேள்விக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் மொத்​தம் 300 மதிப்​பெண். இதில் வெற்​றி​பெறு​வோர் அடுத்​தகட்ட தேர்​வான முதன்​மைத் தேர்​வுக்கு அனு​ம​திக்​கப்​படு​வர்.

முதன்​மைத் தேர்​வானது குரூப்-2 பணி​களுக்​கும், குரூப்-2ஏ பணி​களுக்​கும் தனித்​தனியே நடத்​தப்​படும். குரூப்-2 பணி​களுக்​கான முதன்​மைத் தேர்​வில், பொது அறிவு பகு​தி​யில் 300 மதிப்​பெண்​களுக்கு விரி​வாக விடையளிக்க வேண்​டும். குரூப்-2 ஏ பணி​களுக்கு பொது அறிவு பகு​தி​யில் 150 கேள்வி​கள், கணிதம் பகு​தி​யில் 50 கேள்வி​கள் என அப்​ஜெக்​டிவ் முறை​யில் 200 கேள்வி​கள் இடம்​பெறும். மொத்த மதிப்​பெண் 300. இது கணினிவழி​யில் நடத்​தப்​படும்.

முன்பு பொது அறிவு பகு​தி​யில் பொதுதமிழ் அல்​லது பொது ஆங்​கிலம் தொடர்​பான 60 வினாக்​கள் இடம்​பெற்​றிருந்​தன. தற்​போது புதிய தேர்​வு​முறை​யில் அப்​பகுதி நீக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், விரி​வாக பதில் எழுதக்​கூடிய கட்​டாய தமிழ் மொழித் தகு​தித்​தாள் தேர்வு குரூப்-2 குருப் 2-ஏ இரு முதன்​மைத் தேர்​விலும் பொது தேர்​வாக இடம்​பெறும். இதில் குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் பெற வேண்​டும். இந்த தேர்​வில் எடுக்​கும் மதிப்​பெண் ரேங்க் பட்​டியல் தயாரிக்க எடுத்​துக் கொள்​ளப்​ப​டாது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தேர்​வர்​கள் ஏமாற்​றம்: ஒருங்​கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்​வில் குறைந்​த​பட்​சம் 2 ஆயிரம் காலி​யிடங்​களாவது வரும என டிஎன்​பிஎஸ்சி தேர்​வர்​கள் எதிர்​பார்த்​திருந்த நிலை​யில், தற்​போது வெறும் 645 காலி​யிடங்​கள் அறிவிக்​கப்​பட்​டிருப்​பது அவர்​களை ஏமாற்​றத்​துக்கு உள்​ளாக்​கி​யுள்​ளது. அரசு துறை​களில் லட்​சக்​கணக்​கான காலி​யிடங்​கள் இருப்​ப​தால அரசு ஊழியர் சங்​கங்​கள் தொடர்ந்து கூறிவரும் நிலை​யில் குரூப்-2 , குரூப்-2ஏ தேர்​வில் 645 காலி​யிடங்​கள் மட்​டுமே நிரப்​பப்பட இருப்​ப​தால்​ தேர்​வர்​கள்​ கவலை​யில்​ ஆழ்​ந்​துள்​ளனர்​.


























MORE INFO AND ONLINE APPLICATION
👇


OR 



🙏



12/7/2025 
அன்று நடந்த GROUP IV QUESTION PAPER SETUP 
பார்க்கும் போது யாரும்
 TNPSC பக்கமே போகமாட்டார்கள்
👎


 SSC/UPSC போனால் இந்த அளவு காஸ்டம் இல்லை  
👍

🙏




















No comments:

Post a Comment