முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. செயலில் பதிவு செய்யப்படும் விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு அனுப்பபடும். மக்கள்தொகை விவரங்களை பெற முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யவும் வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
No comments:
Post a Comment