பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் 14ம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click Here
👇
👇
Download the Hall Ticket
👆
All the Best
🔰🔰🔰🔰🔰
✳️✳️✳️✳️
✴️✴️✴️
🙏